PUBLISHED ON : ஆக 06, 2017

உடல்நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும்.
உடல், மனம், ஆன்மா ஆகிய 3ம் தூய்மை செய்யும் வல்லமை, கடுக்காய்க்கு உண்டு என்கிறார் திருமூலர். அன்றாடம் உணவில் கடுக்காயை சேர்த்து வந்தால், தேவையான துவர்ப்பை பெறலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு படுக்கும் முன்பு சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீடித்த வாழ்க்கை பெறலாம்.
கண்பார்வை கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள்,வாய்ப்புண், தொண்டை புண், இரைப்பை புண், குடற் புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைபடுதல், மூத்திர குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், பவுத்திர கட்டி, சர்க்கரை நோய், இதயநோய், மூட்டு வலி, உடல் பலகீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறு, ஆண்களின் உயிரணுக்களில் குறைபாடு போன்ற அனைத்திற்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நடுப்பகல் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து கடுக்காயை இரவினில் சாப்பிட்டுவர பழகிக்கொள்ளுங்கள். பெரும்பாலான நோய்கள் உங்களை அண்டாது.
திரிபலா: திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய் தான்தோன்றி காய் ஆகிய மூன்று சமஅளவு கலந்தது. இதனை எவர்வேண்டுமானாலும், அளவோடு சாப்பிடலாம். இந்த மருந்தை காலை, இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைத்து கொள்ளலாம்.

