PUBLISHED ON : ஆக 06, 2017

குளிர்காலத்தில் பல்வேறு சரும பிரச்னைகள் ஏற்படும். ஏனெனில் கடுமையான குளிர்காற்றினால் சருமத்தில் உள்ள ஈரப்பசையானது போய்விடும். குளிர், சருமத்தை மட்டுமின்றி உதடுகளையும் அதிகமாக தாக்கும்.
ஆகவே, பலர் உதடுகளுக்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் லிப் பாம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். தரமற்ற, லிப் பாம்களை பயன்படுத்தினால் உதடுகள் விரைவில் கருமையாகி விடுவதோடு மென்மை தன்மையையும் இழந்து வெடிப்புகளுடன் காணப்படும்.
தேங்காய் எண்ணெய்: உதடு வறட்சியை போக்குவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது பாலை உதடுகளில் தடவிக்கொண்டால், வறட்சி நீங்குவதோடு உதடுகளும் மென்மையாக இருக்கும்.
கிளிசரின்: கடைகளில் விற்கப்படும் லிப் பாம்கள் கிளிசரின் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. அத்தகைய கிளிசரினை நேரடியாக உதடுகளில் தடவினால், உதட்டின் வறட்சி தடுக்கப்படுவதோடு மென்மையாகவும் மாறும்.
ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலை முகம் மற்றும் உதடுகளுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம், உதடுகளில் ஏற்படும் வறட்சி, வெடிப்புகள் நீங்கும்.
தேன்: தேனை எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் ஸ்கிரப் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும். அந்த தேனை கொண்டு வறட்சி ஏற்படும் உதடுகளில் மசாஜ் செய்தால் உதடுகள் அழகான தோற்றமளிக்கும்.
வெண்ணெய்: உதடு வறட்சிக்கு, சிறந்த இயற்கையான லிப் பாம் என்றால் அது வெண்ணெய்தான். தினமும் படுக்கும் முன் மசாஜ் செய்யுங்கள்.
நெய்: உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்கும் சக்தி கொண்டதுதான். நெய்யை கொண்டு உதடுகளை பராமரித்தால் உதடுகள் மென்மையாவதோடு, நிறமும் மேம்படும்.

