தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நெல்லிக்காய் லேகியம் தரலாம்

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நெல்லிக்காய் லேகியம் தரலாம்

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர நெல்லிக்காய் லேகியம் தரலாம்


PUBLISHED ON : நவ 20, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகள் இறப்பிற்கான காரணங்கள்?

சர்வதேச குழந்தைகள் தினமான இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான, குழந்தைகளுக்கான, 'யுனிசெப்' அமைப்பு, 'ஐந்து முதல், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், உலகம் முழுவதும், இறப்பதற்கான முதல், 10 காரணங்களில், முதலாவது இருப்பது, சுவாச மற்றும் செரிமான மண்டல தொற்று நோய்களால் தான்' என்று கூறுகிறது. அடுத்தது, ஊட்டச்சத்து குறைபாடு.

ஊட்டச்சத்து குறைபாடால் வரும் பாதிப்புகள்?

உலகம், எல்லாவற்றையும் கற்று கொடுத்து விடும். ஆனால், ஊட்டச்சத்து என்பது, வீட்டில் மட்டும் தான் கிடைக்கும். முதல், 20 ஆண்டுகள், அவரவரின் சூழல், குடும்ப பின்னணி, கலாசாரம், பழக்க வழக்கத்திற்கு ஏற்ற, சத்தான உணவுப் பழக்கத்தை குழந்தைக்கு, பெற்றோர் பழக்க வேண்டும். இது, ஊட்டச் சத்துக்களின் முதலீட்டு பருவம் போன்றது. இதன் பலன், பின்னாளில் தான் தெரியும். 20 வயது வரை உடலில் உருவாகும் எலும்பு, நரம்பு, தசை, கண் பார்வை, தோல் வளர்ச்சி இவையெல்லாம் தான், வாழ்க்கை முழுவதும் எடுத்து செலவு செய்யும் விஷயம்.

எந்த இடத்திலும் கிடைக்காத உணவு வளமும், பாரம்பரிய மருத்துவ அறிவும் நம்மிடம் உள்ளது. மருத்துவ உதவி தேவைப்படும் போது, கொடுக்க வேண்டும். ஆனால், முடிந்த அளவு, உணவு பழக்கத்தின் மூலமே, பிரச்னைகளை வரும்முன் தவிர்த்து விட வேண்டும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க?

பிறந்தது முதல், குறைந்தது, முதல் ஆறு மாதங்களுக்காவது, தாய்ப்பால் தருவது, நம் ஊரில் இயல்பான விஷயம். இது, குழந்தைக்கு, உணவு, மருந்து இரண்டும் சேர்ந்த உணவு.குழந்தை பிறந்த பின், குறிப்பிட்ட நாட்கள் கழித்து, தாய்க்கும், சேய்க்கும் தலைக்கு குளிக்க வைப்பர்.

அதன் பின், வாரம் ஒரு முறை, குழந்தைக்கு தலைக்கு குளிக்க வைக்கும் போது, 'வேப்பங் காரம்' என்ற ஒன்று தருவர். வேப்பம் கொழுந்து, சீரகம், ஒரு துளி அளவு பூண்டு சேர்த்து நசுக்கி, ஒரு வெள்ளி சங்கில் தாய்ப்பால் எடுத்து இதைக் கலந்து, குழந்தைக்கு வெறும் வயிற்றில் ஊற்றி விடுவர்.சளி, வேண்டாத நச்சுக்கள் உடலில் இருந்தால், இந்த மருந்துடன் சேர்த்து, வாந்தியாக வெளியில் வந்து விடும். செரிமான மண்டலம் சுவாச பாதையில் தொற்றுக் கிருமி ஏற்படாமல் தடுக்கும் மருந்த இது. இதை, 3 - 10 வயது வரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும், வாரம் ஒரு முறை தரலாம். மழை காலத்தில், மாதம் ஒரு முறை தரலாம்.

குழந்தைகளின் பசியின்மைக்கு காரணம்?

பசியின்மை என்பது, குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பொதுவான பிரச்னை தான். இதற்கு, எளிமையான மருந்து, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு. இத்துடன், ஏலக்காய், சீரகம் சேர்ந்த, 'பஞ்ச தீபாக்னி' என்ற சூரணம், கடைகளில் கிடைக்கும். வீட்டிலும் செய்து கொள்ளலாம். இதை, கால் டீஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து கொடுத்தால், நன்கு பசிக்க ஆரம்பிக்கும்; செரிமான சக்தியும் அதிகரிக்கும். 5 - 10 நாட்களுக்கு, காலை, இரவு உணவுக்கு முன் கொடுக்கலாம்.

பசிக்காமல் இருப்பதற்கும், சாப்பிட்ட உணவில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் உடலில் சேர விடாமல் உறிஞ்சி கொள்வதற்கும், குடல் புழுக்களே காரணம். அதற்கு, சமையலில் தினமும், சுண்டைக்காய் வற்றலை சேர்க்கலாம். நான்கைந்து வற்றலை நசுக்கி, தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, குடிக்க கொடுக்கலாம்.சுண்டை வற்றல் சூரணம், கால் ஸ்பூன் தேன் அல்லது வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். வயிறு சுத்தமாகி விடும். வயிறு சுத்தமாகி விட்டால், நன்கு பசிக்கும்.

பொதுவான ஆரோக்கிய குறிப்பு?

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால், ஆண்டிற்கு மூன்று மாதங்கள், நெல்லிக்காய் லேகியத்தை, தினமும் கால் ஸ்பூன் தரலாம். வளரும் பருவத்தில் இதை தரும் போது, சுவாச, செரிமான மண்டலத்திற்கு நல்லது. மூன்று வயதிற்கு மேல் கொடுக்கலாம்.

மூலிகை மணி அபிராமி

சித்த மருத்துவர்,

சென்னை.

96000 10696

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us