
பொருள்: மச்சம் மீன்; இந்த ஆசனம், மீனைப் போல் தோற்றமளிப்பதால் இந்த பெயர் பெற்றது.
செய்முறை:
* விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும்
* கைகளை உடலை ஒட்டியவாறு கால்களுக்கு கீழே வைக்கவும்
* மூச்சை இழுத்துக் கொண்டே தலையை உயர்த்தி, கால் விரல்களை பார்த்து, மூச்சை வெளிவிட்டுக் கொண்டே தலையை பின்னால் வளைக்கவும்
* இந்த நிலையில் நெஞ்சு, நன்றாக உயர்ந்து, விரிந்த நிலையில் இருக்க வேண்டும். உடல் எடை அதிகபட்சம் நம் முழங்கைகளில் இருக்க வேண்டும்
* சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்தில் இருந்த பின், மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே பழைய நிலைக்கு வரவும்
பலன்கள்:
1. நெஞ்சு நன்றாக விரிவடைவதால், நுரையீரல் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது.
2. கண் பார்வை திறன் அதிகமாகிறது.
3. தைராய்டு சுரப்பியை கட்டுப்படுத்துகிறது.
குறிப்பு: கழுத்து வலி உள்ளோர், தகுந்த யோகாசன ஆசிரியரின் ஆலோசனைப் படி செய்ய வேண்டும்.
ரா.சுதாகர்,
திருமூலர் பிரபஞ்ச யோகா மையம்,
சென்னை.
போன்: 97909 11053

