தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'கிரீன் ஜூஸ் தெரபி!'

'கிரீன் ஜூஸ் தெரபி!'

'கிரீன் ஜூஸ் தெரபி!'


PUBLISHED ON : பிப் 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒழுங்கற்ற மாதவிடாய், தலைமுடி உதிர்வது, நீண்ட நாள் உடல் வலி, நிரந்தர சோம்பல் ஆகியவை தான், பெரும்பாலானவர்கள் என்னிடம் சொல்லும் பிரச்னை. இதற்கு முக்கிய காரணம், இரும்பு சத்து குறைபாடாக இருக்கலாம்.

இதற்கு எளிமையான ஒரு தீர்வு சொல்கிறேன்:

விருப்பமான ஏதேனும் ஒரு கீரையை எடுத்துக் கொள்ளுங்கள். புதினா, மல்லி, முருங்கை, மணத்தக்காளி, பாலக் கீரை என்று ஏதோ ஒரு பச்சை கீரை.

ஒரு கை பிடி அளவு கீரையை சுத்தம் செய்து, மிக்ஸியில் போட்டு, இத்துடன், ஒரு ஸ்பூன் எள், ஒரு ஸ்பூன் ஆளி விதை சேர்த்து, சிறிது நீர் விட்டு அரைத்து பின், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அரைத்து, வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் கலந்து, வாரத்திற்கு இரண்டு நாள் குடிக்கலாம். எந்த வயதினரும் இதை குடிக்கலாம்.

எள் இருப்பதால் கால்சியம் கிடைக்கும்.

இரும்புச் சத்து நிறைய இருப்பதால், மாதவிடாய் சீராகும், வெள்ளைப்படுதல் கட்டுப்படும். தலைமுடி உதிர்வது கட்டுப்படும். எலும்பு பலவீனம் இருந்தால் இதை குடிக்கலாம். சர்க்கரை கோளாறு இருந்தால், இனிப்பு சேர்க்காமல் குடிக்கலாம்.

வளரும் குழந்தைகளுக்கு வாரம் மூன்று நாள் கொடுக்கலாம். இரும்பு சத்து முழுமையான உடல் கிரகிக்க, விட்டமின் - சி தேவை.

எனவே இந்த பானம் குடிக்கும் போது, கூடவே ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதில் உள்ள பொருட்கள் எல்லாம் சுலபமாக கிடைக்க கூடியவை. இரும்பு சத்து குறைவாக இருந்தால், தொடர்ந்து மூன்று மாதத்திற்கு குடிக்க வேண்டும்.

டாக்டர் சுபா ரவி.

சஞ்சீவனம் ஆயுர்வேத தெரபி மையம்,

சென்னை.

91766 02599

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us