PUBLISHED ON : பிப் 06, 2021

'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தத்தில் சிக்கும் குழந்தைகளை அதில் இருந்து மீட்க, என்ன செய்யலாம் என பரிந்துரைக்கிறார் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.
* குழந்தையுடன் அமர்ந்து பேசி, அவர்களின் பிரச்னையை கண்டறியுங்கள்
* ஒருவேளை உங்கள் குழந்தை பக்கம் ஏதேனும் தவறு இருப்பின், அதை எப்படி திருத்தி கொள்வது என, ஆலோசனை கூறி, அவர்களை சரியான திசையில் வழிநடத்துங்கள்
* பின், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த இதேபோன்றதொரு விஷயத்தை, உதாரணமாக அவர்களுக்கு முன்மொழியவும்
* இதன் மூலம், எந்தவொரு பிரச்னையும், தற்காலிகமானது தான் என்ற புரிதலை குழந்தைக்கு கொடுக்கலாம்
* குழந்தைகளை, புத்தகம் படிக்க பழக்கப்படுத்துங்கள். குறிப்பாக, வரலாற்று புத்தகங்கள்,- தன்னம்பிக்கை புத்தகங்கள் போன்றவற்றை அவர்களுக்கு பழக்கப்படுத்தவும்
* குழந்தைகளுக்கும், மொபைலுக்குமான நேரத்தை குறையுங்கள்
* எதிர்மறை விஷயங்களை குழந்தைகள் முன்னிலையிலோ, குழந்தைகளுடனோ பேச வேண்டாம். அப்படிப்பட்ட செய்திகளைக்கூட குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டாம்
* நேரம் கிடைக்கும் போதெல்லாம், குழந்தையோடு, 'இண்டோர் கேம்ஸ்' விளையாடுங்கள்.
