தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் எது?

உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் எது?

உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் எது?


PUBLISHED ON : பிப் 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலை அல்லது மாலை நேரம் ஏற்றது. உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது திட உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து, உடற்பயிற்சி செய்வது நல்லது. சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை தவிர்த்து, புதிதாக பயிற்சி செய்வது இதயத்தை பாதிக்குமா?

இதயத்தை பாதிக்குமா என்பதை விடவும், வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை மாற்றி, போதுமான தயாரிப்பு இல்லாமல், புதிய வகையான உடற்பயிற்சிகளை செய்யும் போது, எலும்பு, தசைகளை அதிகம் பாதிக்கும்.

அதே நேரம் இதய நோயிலிருந்து குணாமானவர்கள், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், புதிய, கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, நிச்சயம் இதயத்தை பாதிக்கும்.

இதய கோளாறு இருப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், பாதிப்பில் இருந்து மீண்ட பின், தங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி, உடற்பயிற்சி செய்வதே பாதுகாப்பானது.

உடற்பயிற்சியின் தேவை, நபருக்கு நபர் மாறுபடுமா?

அந்தந்த வயதிற்கு ஏற்ற, பொதுவான சில உடற்பயிற்சிகளை அனைவரும் செய்யலாம். ஆனாலும் வயது, உடல் எடை, தேவைகளுக்கு ஏற்ப, பயிற்சிகளை செய்தால் கூடுதல் பலனை தரும்.

எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி அவசியம்?

பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கு வாரத்தில், ஐந்து - ஆறு நாட்கள் தினமும், 20 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடக்க வேண்டியது அவசியம்.

நடக்கும்போது கைகளை நன்றாக வீசி நடப்பது தோள், கைகள், 'ரிலாக்சாக' உதவும் என, இதுவரையில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்திலும் உறுதியாகி உள்ளது.

டாக்டர் பி.பூபேஸ் கார்த்திக் ஸ்போர்ட்ஸ் மெடிசின்,

பெங்களூரூ.

99439 60910

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us