தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 20 நிமிடம் ஒதுக்கினால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 20 நிமிடம் ஒதுக்கினால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 20 நிமிடம் ஒதுக்கினால் போதும்!


PUBLISHED ON : பிப் 08, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''தினமும் 20 நிமிடம் ஒதுக்கி யோகா செய்தால், சர்க்கரை நோய் உட்பட, 95 சதவீத நோய்கள் வராமல் தடுக்கும்,'' என்கிறார் யோகா மற்றும் இயற்கை நலமருத்துவர் ஸ்ரீகுமார்.

நடைபயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமா?

ஊரடங்கு காலத்தில் வெளியே செல்ல முடியாததால், பலரின் ரத்த சர்க்கரை அளவு உயர்ந்தது. வீட்டில் இருக்கும் போது, சாப்பாட்டை குறைக்க முடியவில்லை. சாப்பிட்ட உணவை ஜீரணம் செய்ய முடியவில்லை. இதனால் உடல் எடை அதிகரித்து, சர்க்கரைஅளவும் அதிகரித்துள்ளது.இது போன்ற சூழலில், யோகா பயிற்சி சர்க்கரை அளவைகட்டுப்படுத்த உதவுகிறது.

எந்த மாதிரியான யோகா பயிற்சி செய்தால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும்?

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைப்பதற்கென, ஆசனங்கள் உள்ளன. வஜ்ராசனம், அர்ச்ச மச்சேந்தராசனம், சக்கராசனம், பத்மாசனம், பட்சிமோத்தாசனம் இப்படி பல ஆசனங்கள் உள்ளன. இந்த ஆசனங்களை, முறையாக பயிற்சி எடுத்த பின் செய்ய வேண்டும்.

எல்லா ஆசனங்களையும் செய்ய முடியவில்லை என்றால், மூன்று ஆசனங்கள் செய்தால் போதும். தினமும் 20 நிமிடம் ஒதுக்கினால் போதும். அதே போல், மூச்சு பயிற்சி செய்யலாம். இதன் மூலம் உடலுக்கு முழுமையாக ஆக்சிஜன் கிடைக்கும். மூச்சு குழாய்களும், நுரையீரலும் சுத்தமாவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

உடல் எடையை குறைக்க, எந்த ஆசனம் செய்ய வேண்டும்?

உடல் எடையை குறைக்க, சர்வங்காசனம் செய்யலாம். பொதுவாக யோகா பயிற்சி செய்தாலே, உடல் எடை குறைய துவங்கி விடும். உணவு கட்டுப்பாடு வந்து விடும். இந்த ஆசனங்கள் செய்யும் போது, வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

மனஅழுத்தத்தை குறைப்பதற்கென ஆசனங்கள் உள்ளனவா?

நமது வேலைகளை, திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எதை முதலில் செய்ய வேண்டும் என்பதை, முடிவு செய்து கொண்டு, வேலை துவங்கினால் டென்ஷன் இருக்காது. மன அழுத்தம் உள்ளவர்கள், அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹார்டு ஒர்க்கை, ஸ்மார்ட் ஒர்க்காக மாற்றி செய்ய பழகி கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் வர, மன குழப்பம் முக்கிய காரணம். நம் வாழ்க்கை முறை, உணவு முறை, வேலை செய்யும் இடத்தின் சூழல் இவை மூன்றும்தான், மன குழப்பத்தை உருவாக்கு கிறது. இதை தவிர்க்க, தியானம் செய்வது அவசியம். மன அழுத்தத்துக்கு மருந்து, தியானம்தான்.

இன்று பலர் துாக்கமின்மையால் தவிக்கிறார்களே?

உண்மைதான். ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு மணி நேரம்துாங்க வேண்டும். பிரச்னை இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதற்கான தீர்வை பற்றி யோசிக்காமல், பிரச்னையை பற்றி மட்டுமே யோசிப்பதால், துாக்கம் கெடுகிறது.துாக்கம் சரியாக இல்லை என்றால், பல பிரச்னைகள் வரும்.

மன சிக்கலும், மலச்சிக்கலும் இருக்கவே கூடாது. மலச்சிக்கல்உள்ளவர்களுக்கு துாக்கம் வராது. தினமும் யோகா செய்தால், துாக்கமின்மை உட்பட, 95 சதவீத நோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஸ்ரீகுமார்

தொடர்புக்கு: 99440 69212.

e-mail: gomukeshwara@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us