தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் டேஸ்ட் பண்ணுங்க!

கொஞ்சம் டேஸ்ட் பண்ணுங்க!

கொஞ்சம் டேஸ்ட் பண்ணுங்க!


PUBLISHED ON : மே 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

வரகு அரிசி, பண்டைய காலத்தில், மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகு அரிசி, கோதுமையை விட சிறந்தது. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி, மலச்சிக்கலை போக்கி, உடல் பருமனை குறைக்கிறது. சமைக்கப்பட்ட ஒரு கப் வரகு அரிசியில், காப்பர், 31 சதவீதம், பாஸ்பரஸ், 25 சதவீதம், மாங்கனீஸ், 24 சதவீதம், மக்னீசியம், 19 சதவீதம், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் 'பி' வைட்டமின் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். இதை பயன்படுத்தி கஞ்சி தயாரித்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். சிறுதானியமான இதை அடிக்கடி பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களை தடுக்கும். இதை உப்புமா, பொங்கல்,

புளியோதரையாக செய்து சாப்பிடலாம். உடலுக்கு வலிமையை கொடுக்கும். வீக்கத்தை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.

இன்சுலின் சுரக்கும்: உடல் வளர்ச்சி மற்றும் சேதமடைந்த திசுக்களின் வளர்ச்சிக்கு இதில் உள்ள பாஸ்பரஸ் உதவுகிறது. இதில் உள்ள கனிமச்சத்துக்கள், குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. வரகு அரிசி உணவை, வழக்கமாக உட்கொண்டால், டைப் 2 நீரிழிவு ஆபத்து குறையும் என,

ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு. வரகு அரிசியை பயன்படுத்தி, குழந்தைகள் விரும்பி உண்ணும் வரகு கொழுக்கட்டை தயாரிக்கலாம். இதில் நார்ச்சத்து, அரிசி, கோதுமையை விட அதிகம். மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும், புரதச்சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும்.

இது, பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் அதிகம் உள்ளன. விரைவில் செரிமானம் அடைவதுடன், உடலுக்கு தேவையான சக்தியையும் கொடுக்கும்.

எடை குறையும்: வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் போஷாக்காக வைத்திருக்கலாம். இது, உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள், வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இதை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி இட்லி, தோசை, ஆப்பம், பணியாரம், பொங்கல், பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.

சர்க்கரை அளவை குறைக்கிறது; மூட்டுவலியை குறைக்க உதவுகிறது. கல்லீரலின் செயல்பாடுகளை தூண்டி, கண் நரம்பு நோய்களை தடுக்கும் குணம் உண்டு. நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும். வரகு அரிசியை லேசாக வறுத்து பொடி செய்து எடுக்கவும். இதனுடன் வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடலாம். உடலுக்கு சத்துத்துக்களை கொடுக்கும். உடலை தேற்றும். வரகு அரிசி அற்புதமான உணவாக மட்டுமின்றி மருந்தாகவும் பயன்படுகிறது.

வரகு அரிசி, பச்சை வெங்காயம், உப்பு ஆகியவற்றை தேவையான அளவு நீர்விட்டு, சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பச்சை வெங்காயம், தயிர், உப்பு சேர்த்து சாப்பிடலாம். தினமும் காலையில் இதை சாப்பிட்டுவர உடல் பருமன் குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us