தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளதா?

சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளதா?

சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளதா?


PUBLISHED ON : மார் 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங்களுக்கு வயது நாற்பதை கடந்து விட்டதா? சிலவேளை உங்களுக்கும் இந்த பிரச்னை இருக்கலாம். இல்லாதவர்கள் பாக்கியசாலிகள் என கூறும் அளவுக்கு, அசவுகரியம் தரும் பிரச்னை இது.

ஆண்களுக்கு சிறுநீர்ப்பைக்கு அருகில் அமைந்திருப்பது, ப்ரோஸ்டேட்' சுரப்பி எனப்படும். இதனை விந்துச் சுரப்பி என்றும் கூறுவர். பொதுவாக, 40 வயதை தாண்டுபவர்களுக்கு, இந்த சுரப்பியானது விரிவடையக் கூடும். இதனால் சிறுநீர் கழிப்பதில் சற்று சிரமம் ஏற்படலாம். இதன் விளைவாக சிறுநீர்ப்பை சுருங்குவதுடன், சிறுநீர் வெளியேறும் வழியும் சிறிதாகலாம்.

சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுவது போன்ற அறிகுறிகள், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில், 70 விழுக்காட்டினருக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பிரச்னைக்கு முறையான சிகிச்சை இல்லாவிட்டால் சிறுநீர் தங்குதல், சிறுநீர் செல்லும் வழியில் தொற்று நோய் ஏற்பட்டு வலி ஏற்படுதல், சிறுநீர்ப் பையில் கற்கள், எரிச்சல், சிறுநீரில் ரத்தம் போன்ற பல்வேறு தொடர் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளதால், ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us