உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 28, 2016

அ நிறம் | அளவு
உப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
உலக சுகாதார மையம் நிர்ணயித்த அளவை விடவும் (ஒரு நபருக்கு, நாள் ஒன்றுக்கு, 5 கிராம் உப்பு) இரு மடங்கு கூடுதலாக, உப்பையே, இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் சாப்பிடுகின்றனர். தமிழகத்தில், ஒரு நபர் சராசரியாக, 10.02 கிராம் உப்பு சாப்பிடுகிறார்.
உப்பை குறைக்க என்ன செய்யலாம்?
தினமும், இரு காய்கறிகளை வேக வைத்து சாப்பிடலாம்.முடிந்த அளவு சாஸ், ஊறுகாய், சிப்ஸ், அப்பளம், போன்றவற்றைத் தவிர்க்கலாம். முடியாது என்றால், எவ்வளவு குறைவாக சாப்பிட முடியுமோ, அவ்வளவு குறைவாகச் சாப்பிடலாம்.தினமும், ஒரு பழமாவது அவசியம் சாப்பிட வேண்டும். உணவின் மேலே துாவுவதற்கு எலுமிச்சைச் சாறு, வினிகர், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் பயன்படுத்தலாம்.
