PUBLISHED ON : செப் 23, 2014
நவீனமயமாதலால் மனிதர்கள் தங்களது உடலின் மீதும், சுற்றத்தார் உடலின் மீதும் கவனிப்பு குறைந்து வருகிறது.
மூலிகை செடிகளையும், முன்னோர்களின் அறிவுரைகளையும் பின்பற்றி வந்தால், நோய்களும், தீய சக்திகளும் நம்மை தீண்டாது.
துளசியை வீட்டில் வளர்த்தால், அன்பு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வீட்டின் அழகு அதிகரிக்கும். இந்திய கலாச்சாரத்தின் படி, துளசி செடி கடவுள் போன்று கருதப்படுகிறது. ஆகவே இதனை வீட்டில் வளர்த்து வந்தால், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரிப்பதோடு, தீய சக்தியும் வீட்டில் இருந்து அகலும்.
இந்த செடியை வீட்டினுள் வளர்த்து வந்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். அதுமட்டுமின்றி, இதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால், வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
மல்லிகையை வளர்த்தால், வீட்டில் அன்பு அதிகரிப்பதோடு, செல்வமும் அதிகரிக்கும். இந்த செடியானது, மன அழுத்தத்தில் இருந்து விடுபட, நல்ல நிவாரணம் அளிக்கும்.
லாவெண்டரின் நறுமணத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. இதனை வீட்டினுள் வளர்த்தால், மனம் அமைதி பெறுவதோடு, வீடும் நல்ல வாசனையோடு இருக்கும்.
அன்பின் அடையாளம் தான் ரோஜா. இத்தகைய ரோஜாவை வீட்டில் வளர்க்கும் போது, அது வீட்டின் அழகை அதிகரிக்கும். வெவ்வேறு நிறத்தில் இருக்கும் ரோஜாக்கள் வீட்டில் ரம்மியமாகவும், பேரார்வத்தையும் கொடுக்கும்.
வீட்டின் உள்ளே வளர்ப்பதற்கு ஏதுவான செடிகளில் மிகவும் சிறந்தது தான் மந்தாரை என்னும் ஆர்க்கிட். இவற்றை பராமரிப்பது என்பது மிகவும் எளிதானது. இது அனைவரையும் எளிதில் கவர்வதோடு, மனதை அமைதிப்படுத்துவதிலும் சிறந்தது.
ரோஸ்மேரி, மூளையின் சக்தியை அதிகரிப்பதோடு, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும். இது வீட்டுக்கு பாதுகாப்பையும், தூய்மையையும் கொடுக்கும். எப்படியெனில் இதன் நறுமணத்தால், இது மனதில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்யும்.
இத்தகைய செடிகளை வளர்த்து வருவதன் மூலம், உடலும், மனமும் ஆரோக்கியம் பெறும்.

