sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

தைராய்டு பிரச்னையை தீர்க்கும் ஆரோக்கிய உணவுகள்

/

தைராய்டு பிரச்னையை தீர்க்கும் ஆரோக்கிய உணவுகள்

தைராய்டு பிரச்னையை தீர்க்கும் ஆரோக்கிய உணவுகள்

தைராய்டு பிரச்னையை தீர்க்கும் ஆரோக்கிய உணவுகள்


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களே இந்த பாதிப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ட்ராபெர்ரி: உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டு பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.

காளான்: செலினியம் குறைபாடும், தைராய்டு ஏற்படுவதற்கு முக்கிய காரணம். செலினியம் அதிகம் உள்ள காளானை, உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

பூண்டு: செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.

பசலைக் கீரை: பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள், ஒமேகா 3 ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால் நல்லது.

முட்டை: முட்டை, பால் பொருட்கள், தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளால், கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.

தானியங்கள்: தானியங்களில் பிரவுன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி, ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.

புராக்கோலி: இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.

தக்காளி: தக்காளியில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான, பேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய பேட்டி ஆசிட்கள், தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

கடல் சிப்பி: தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காப்பர், கடல் சிப்பியில் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும் என்று பலர் தவிர்க்கின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், இதிலுள்ள அயோடின், தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும்.

கொள்ளு: அன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே, தைராய்டு பிரச்னை வெகுவாக குறையும்.






      Dinamalar
      Follow us