sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

வந்தாச்சு மழைகாலம் உடல் நிலையில் கவனம்!

/

வந்தாச்சு மழைகாலம் உடல் நிலையில் கவனம்!

வந்தாச்சு மழைகாலம் உடல் நிலையில் கவனம்!

வந்தாச்சு மழைகாலம் உடல் நிலையில் கவனம்!


PUBLISHED ON : ஜூன் 04, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 04, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடை முடிந்து, மழைக்காலம் துவங்கி உள்ளதால், ஆங்காங்கே, சளி, காய்ச்சல் உட்பட சில வியாதிகள் பரவக்கூடும். பொதுவாக, கோடை காலத்தில் சின்னம்மை, வயிற்றுப்போக்கு போன்ற, தொற்று வியாதிகள் ஏற்படும். உடலில் நீரின் அளவு குறைவதால் ஏற்படும், 'டீஹைட்ரேஷன்', உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை மற்றும் நீர்க்கடுப்பு போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

பொதுவாக, மனித உடல் நல்ல நிலையில் இருக்கத் தேவையான வெப்ப நிலை, 25 டிகிரி செல்சியஸ்; தற்போதைய நிலையில், வெப்ப நிலை, 35 40 டிகிரியை சர்வ சாதாரணமாக தொடுகிறது. இந்நிலையில், உடலை குளிர்ச்சியடையச் செய்ய, அதிகளவில் வியர்வை வெளி வரும். இதனால், அதிக அளவில் நீர் பருகுவோம். எல்லா இடங்களிலும் பாதுகாப்பான நீர் கிடைப்பது இல்லை. அவசரத்துக்கு கிடைக்கும் தண்ணீரை குடிப்பதால், தண்ணீர் மூலம் பரவும் வியாதிகளுக்கு, ஆளாக வேண்டி இருக்கிறது.

கலவரம் தரும் காலரா: 'விப்ரியோ காலரா' என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நோய் தான் காலரா. இது அசுத்தமான தண்ணீர் மற்றும் பாதுகாப்பற்ற உணவின் மூலம் பரவுகிறது. காலராவின் முக்கிய அறிகுறி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி. உடலில் இருந்து மிக அதிக அளவில் நீர் மற்றும் 'எலெக்ட்ரோலைட்' என்னும் வேதிப் பொருட்கள் வெளியேறும் போது, உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

தண்ணீர் மற்றும் உணவு மூலம், வயிற்றுக்குச் செல்லும் இக்கிருமியை, இரைப் பையில் உள்ள அமிலங்களே அழித்து விடும். அதிலிருந்து தப்பிச் செல்லும் சில கிருமிகள், சிறு குடலில் பதுங்கி, பல்கிப் பெருகும். இக்கிருமி தொற்று, நான்கு மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரத்துக்குள், சிறு குடலில் வளர்ச்சி அடைந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, சரியான சிகிச்சை மேற்கொள்ளவில்லை எனில், 18 மணி நேரத்தில் தொடங்கி, சில நாட்களுக்குள் உயிரிழப்பு கூட ஏற்படும். நீர்ச்சத்து வெளியேறிக் கொண்டே இருப்பதைத் தடுக்க, நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, ஒரு டம்ளர் நீர், ஒரு ஸ்பூன் சர்க்கரை, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கிக் கொடுக்க வேண்டும். இளநீர், பழச்சாறு குடிக்கக் கொடுக்கலாம்.

சின்னம்மை: எளிதில் பரவும் தன்மை கொண்டது சின்னம்மை. இது 'வேரிசில்லா சோஸ்டர் வைரஸ்' என்ற கிருமியால் பரவுகிறது. முதலில் உடலில் அரிப்பு ஏற்படும்; அதன் பிறகு நீர்க்கட்டி தோன்றும்; காற்று மூலம் பரவும். தும்மினாலோ, நேரடித் தொடர்பாலோ ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவும். அரிப்பு வருவதற்கு இரு நாட்கள் முன்பும், அரிப்பு வந்த ஆறு நாட்களுக்குப் பிறகும், நோய் பரவுதல் அதிகமாக இருக்கும்.

அந்த நேரத்தில் மட்டும், நோயாளியை தனிமையில் வைத்திருக்க வேண்டும்; இது தானாகவே சரியாகி விடும். இதன் வீரியத்தைக் குறைக்க, ஆன்டி வைரல் மருந்துகள் உள்ளன. வீட்டில் ஒருவருக்கு, அம்மைத் தொற்று வந்து விட்டால், வீட்டில் உள்ள மற்றவர்கள், தடுப்பூசி போட்டு கொள்ளலாம். ஏற்கெனவே அம்மை வந்திருந்தால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; அவர்களுக்கு மீண்டும் அம்மை வரும் வாய்ப்பு குறைவு. நோய் எதிர்ப்பு சக்தி யாருக்கு குறைவாக இருக்கிறதோ அவர்களுக்கு, இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். சின்னம்மை பாதிப்புக்கு ஆளானவருக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள், நீர்ச்சத்து மிக்க பழங்களை சாப்பிடக் கொடுக்கலாம்.






      Dinamalar
      Follow us