PUBLISHED ON : ஜூலை 21, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகன், ஆண்டிப்பட்டி: எனக்கு ஓராண்டுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். நான், 'ஜிம்'க்கு சென்று, 'வெயிட் லிப்டிங்' செய்யலாமா?
இதய நோயாளிகள், மாரடைப்பு வந்தவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள், ஸ்டென்ட் சிகிச்சை பெற்றவர்கள், ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் அவசியம், கனமான பொருட்களை தூக்குவதை தவிர்த்தாக வேண்டும். அதிக எடையை, 'தம்' பிடித்து தூக்கும்போது, இதய துடிப்பு, ரத்தஅழுத்தம் அதிகரிக்கவும், ரத்தநாளங்கள் சுருங்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதய நோயாளிகள், 5 கிலோவுக்கு மேல், பாரம் தூக்குவதை தவிர்ப்பது நல்லது.