உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : மார் 11, 2012
அ நிறம் | அளவு
எனது வயது 31. ஓராண்டுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. நான் கடின வேலைகளை செய்ய முடியுமா?
உங்களுக்கு அவசியம், எக்கோ, டிரெட் மில் மற்றும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் தேவைப்படும். இவற்றின் முடிவைப் பொறுத்தே, நீங்கள் எந்தளவு வேலை செய்ய முடியும் என்பதை, உறுதி செய்ய முடியும். ஒருமுறை மாரடைப்பு வந்தால், வாழ்நாள் முழுவதும், மருந்து எடுத்தாக வேண்டும். உங்களுக்கு, ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை தேவையா, பை-பாஸ் சர்ஜரி தேவையா என, ஆஞ்சியோ பரிசோதனை மூலமே அறிய முடியும். இப்பரிசோதனைகள் அனைத்திலும், முடிவுகள், 'நார்மல்' என வந்தால், நீங்கள் உங்கள் இதய டாக்டரின் ஆலோசனைப்படி, மருந்துகளை எடுத்துக் கொண்டு, மாமூல் வாழ்க்கைக்கு திரும்பலாம்.
