தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மாரடைப்பு பாதிப்புகள் மகளிருக்கு அதிகம்!

மாரடைப்பு பாதிப்புகள் மகளிருக்கு அதிகம்!

மாரடைப்பு பாதிப்புகள் மகளிருக்கு அதிகம்!


PUBLISHED ON : மார் 26, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததைக் காட்டிலும், தற்போது நோய்கள், குறிப்பாக பெண்களுக்கு அதிகரித்து உள்ளதா?



தொற்றாத நோய்களான, நீரிழிவு கோளாறு, உடல் பருமன், தைராய்டு கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், இணைப்பு திசு கோளாறுகள் போன்றவை, இதய நோய்களை உண்டாக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன; மாரடைப்புக்கான ஆபத்தை ஏற்படுத்தும்.

இதய நோய் என்பது, பாலினம் சார்ந்ததல்ல. பொதுவாக, பெண்கள், ஆண்களை விடப் பாதுகாப்பாக இருக்கின்றனர். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, ஆண்களை விட ஆபத்து அதிகம்; உடல் பருமனும் பெண்களுக்கு ஆபத்து. மாரடைப்பு வந்த பின், இறப்பு விகிதம், ஆண்களை விடவும் பெண்களுக்கு அதிகம் உள்ளது.

இதய நோய்கள், ஆண்களை விட பெண்களை அதிகமாகப் பாதிக்குமா? அதற்கான காரணம் என்ன?



மாதவிடாய் நின்ற பின், இதய நோய்கள், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமான உள்ளது.

மாரடைப்பின் பொதுவான அறிகுறிகள் என்னென்ன?



மார்பில் வலி. மார்பைக் கசக்குவது போன்ற வலி, மார்பில் இறுக்கம், வியர்வையுடன் வலி. மார்பில் அழுத்துவது போன்ற உணர்வுடன் வலி பொதுவான அறிகுறிகளாக இருக்கும். சுவாசிக்க கடினம், மூச்சுத் திணறல், படபடப்பு, குமட்டல், சோர்வு ஆகிய அறிகுறிகளும் காணப்படும். பெண்களுக்கு பெரும்பாலும் தாடை, இடது கை மற்றும் முதுகில் வலி ஏற்படும்.

வீடு மற்றும் அலுவலகத்தில் மாரடைப்புக்கான முதலுதவி எவை?



புதிய நோயாளிகள், 'ஆஸ்பிரின்' 325 மி. கி., மாத்திரையை மென்று விழுங்க வேண்டும். ஏற்கனவே பாதிப்பு அறியப்பட்ட இதய நோயாளிகள், 'ஆஸ்பிரின்க்ளோபிடோக்ரல்' மற்றும் 'ஸ்டாட்டின்' ஆகிய மாத்திரைகளை வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்சை அவசரமாக அழைக்க வேண்டும்.

இதய வால்வு நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?



நான்கு இதய வால்வுகள் உள்ளன. அவற்றில், 'மைட்ரல்' மற்றும் 'அயோடிக்' வால்வு இரண்டும், உடல் முழுவதும் ரத்தம் செல்ல உதவுகின்றன. வால்வைத் திறப்பதிலும், மூடுவதிலும் ஏற்படும் சிரமங்கள், இதய வால்வு நோயை உருவாக்குகிறது. இது, இதயம் வழியாகச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீர்குலைக்கும். இதன் விளைவாக, இதய குறுக்கம், ரத்தத்தை வால்வுக்கு வெளியே தள்ளுதல் மற்றும் மார்பு வலி ஆகியவை ஏற்படும்.

மாரடைப்பு மற்றும் வால்வு மாற்றத்திற்குப் பின், வாழ்க்கை முறையில் மாற்றம் தேவைப்படுமா?



இதய நோய்களின் அனைத்து ஆபத்து காரணிகளும் கவனிக்கப்பட வேண்டும். உயரத்திற்கு ஏற்ற சீரான உடல் எடை, உணவு மற்றும் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு தேவை.மேலும், ரத்த சர்க்கரை சீராக வைத்திருத்தல், புகைபிடித்தல் மற்றும் மது பழக்கத்தை தவிர்த்தல், டாக்டர் ஆலோசனைப்படி, தவறாமல் மருந்துகளை சாப்பிடுவது மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கு தவறாமல் செல்வது முக்கியம். தவிர, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது அவசியம்.

கர்ப்ப காலத்தில், பிரசவத்திற்கு பின், மாதவிடாய் நின்ற பின், பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும் நோய்கள் எவை?



கர்ப்ப காலத்தில், உயர் ரத்த அழுத்தம், இதய வால்வு நோய், பிறவி இதய நோய் ஆகியவை அதிகமாகலாம். கர்ப்பத்திற்குப் பிறகு, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் கட்டுக்குள் வரும். மாதவிடாய் நின்ற பிறகு, 'கரோனரி' தமனி எனப்படும் மகா தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, ரத்த நாளங்களில் பிரச்னை ஆகியவை ஏற்படலாம்.

டாக்டர் கே.எல். ஹேமலதா,

கோவை மெடிக்கல் சென்டர்,

கோவை.95666 39298

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us