நாங்க இப்படித்தாங்க!: புஷ் பின்னால் ஓடும் அம்பானி!
நாங்க இப்படித்தாங்க!: புஷ் பின்னால் ஓடும் அம்பானி!
PUBLISHED ON : ஏப் 15, 2018

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, வாரத்தின் ஆறு நாட்கள், அனில் அம்பானி, தவறாமல் செய்யும் விஷயம், காலை, 5:30க்கு எழுந்து, 18 கி.மீ., துாரம், 'ஜாகிங்' போவது. இந்த விஷயத்தில் மட்டும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், அனில் அம்பானியின், நாயகன்.
மும்பை, டில்லி மாரத்தானில் தவறாமல் கலந்து கொள்வார். மாரத்தான் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்பது அனில் குழந்தைகள் விருப்பம். ஓடுவதற்கு ஏற்ப, 'பிட்னெஸ்' உடன் இருக்க வேண்டும் என்பதற்காக, கடந்த சில ஆண்டுகளாக யோகா செய்கிறார்.
திருமலைக்கு வந்தால், ஏழு மலைகளையும் படிகளில் ஏறி சென்றே, பெருமாளை தரிசிப்பார்.
அனில் அம்பானி பின்பற்றும் இன்னொரு விஷயம், நேரம் தவறாமை. யாருக்கு, 'அப்பாயின்மென்ட்' கொடுத்தாலும், அதற்கு ஓரிரு நிமிடங்கள் முன்னதாகவே வந்து விடுவார்.
அனில் அம்பானி, தொழிலதிபர். மும்பை.

