தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நாங்க இப்படிதானுங்க!: அப்பாவும், அக் ஷய் குமாரும்!

நாங்க இப்படிதானுங்க!: அப்பாவும், அக் ஷய் குமாரும்!

நாங்க இப்படிதானுங்க!: அப்பாவும், அக் ஷய் குமாரும்!


PUBLISHED ON : செப் 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், நான் சினிமாவில் நுழைந்த போது, என் பின்னால் யாரும் இல்லை. உனக்கு எந்த அழுத்தமும் அவசியம் இல்லை. உன் பின்னால் சிரஞ்சீவி இருக்கிறேன்; ரிலாக்ஸ்!' என் அப்பா சொன்ன இந்த வார்த்தைகள் தான், எனக்கு, 'டானிக்!' நான் எத்தனை மணிக்கு துாங்குகிறேன் என்பதில் ஆரம்பித்து, என்னை அப்பா கவனித்துக் கொண்டே இருப்பார்.

ஒழுக்கம் மட்டுமே வெற்றியைத் தரும் என்பதை செய்து காட்டியவர்; தொழில், தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் ஒழுங்குமுறையை கடைபிடிப்பார்.

இந்தி நடிகர் அக் ஷய் குமார், கல்லுாரி மாணவர்களிடம் உரையாடியதைக் கேட்டேன். 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?' என்ற கேள்விக்கு, 'டிசிப்ளின்' என்று பதில் சொன்னார்.

கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நேரம் தவறாமை, கச்சிதமான உடல்வாகு என்று அவர் இருப்பது தான், இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்க காரணம் என்று புரிந்தது.

அப்பாவையும், அக் ஷய் குமாரையும் போல இருக்கவே முயற்சிக்கிறேன்.



ராம் சரண் தேஜா

தெலுங்கு நடிகர், ஐதராபாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us