தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நாங்க இப்படிதானுங்க!: பயிற்சி செய்தால் படிக்க வேண்டாம்!

நாங்க இப்படிதானுங்க!: பயிற்சி செய்தால் படிக்க வேண்டாம்!

நாங்க இப்படிதானுங்க!: பயிற்சி செய்தால் படிக்க வேண்டாம்!


PUBLISHED ON : செப் 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் பத்தாம் வயதில் ஸ்குவாஷ் பிளேயர் ஆக போகிறேன் என்று பெற்றோரிடம் சொன்னேன். என் அப்பா ஸ்குவாஷ் வீரர் என்பதால், அவர் பயிற்சிக்குப் போகும் போது உடன் போவேன்; அப்படித் தான் ஆர்வம் வந்தது. இன்னொரு விஷயம், ஸ்கூலுக்குப் போகவே பிடிக்காது.

விளையாடினால் வகுப்புகளுக்கு போக வேண்டாம் என்பதால், ஸ்குவாஷ் ரொம்ப பிடித்தது. டென்னிஸ், பேட்மின்டன் என, ஸ்குவாஷ் போலவே, ராக்கெட் வைத்து விளையாடும் அனைத்தும் பிடிக்கும்.

அப்பா ஸ்குவாஷ் வீரர் என்பதால், என் அடையாளமும் இது தான் என, முடிவு செய்தேன்.

ஒரு நாளில், பாதிக்கும் அதிகமான நேரம், 'பிட்னெஸ்' பயிற்சிக்கானது.

வாரத்தில் ஐந்து நாட்கள் இது போல பயிற்சி செய்வேன். ஸ்குவாஷ் விளையாடுவதுடன், கடற்கரை மணலில் ஓடுவது, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும் பயிற்சிகளும் செய்வேன்.

போட்டிகளின் போது, இடது கால் ஷூ, இடது கை சாக்ஸ் தான் முதலில் அணிவேன்; மூன்று வேளையும் ஒரே மாதிரியான உணவையே சாப்பிடுவேன். இந்த இரண்டும் என், 'சென்டிமென்ட்!'

ஜோஷ்னா சின்னப்பா, தமிழக ஸ்குவாஷ் வீராங்கனை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us