தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குழந்தைகளுக்கு ஏற்படும் 'தூக்க பயங்கரவாதம்'

குழந்தைகளுக்கு ஏற்படும் 'தூக்க பயங்கரவாதம்'

குழந்தைகளுக்கு ஏற்படும் 'தூக்க பயங்கரவாதம்'


PUBLISHED ON : செப் 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

* என் ஐந்து வயது மகள் நகம் கடிக்கிறாள். இதனால் பின் விளைவுகள் ஏதேனும் உண்டா?

குழந்தைகள் பல காரணங்களினால் நகம் கடிக்கின்றனர். அலுப்பு, ஆர்வக் கோளாறு, மன அழுத்தம், பிறரை பார்த்து அதே போல் பழகுவது, குழந்தைகள் மூக்கை நோண்டுதல், விரல்களை சப்புதல், முடியை பிடித்து இழுத்தல், பற்களை கடித்தல் போன்ற பழக்கங்களில் இதுவும் ஒரு பழக்கம் தான். சில சமயங்களில் குழந்தைகள் வளர்ந்த பிறகு, இது பெற்றோர் அறியாத பதட்டமும், அழுத்தமும் நகம் கடிப்பது போன்று வெளிப்படும். இது 'டிவி' பார்க்கும் பொழுது, அலைபேசியை பயன்படுத்தும்போது கூடுதலாக தென்படும்.

இதற்கான தீர்வாக குழந்தைகளின் பதற்றத்தை சரி செய்தல், குழந்தைகள் புதிய மாறுதல் காரணமாகவோ, பெற்றோரின் பிரச்னைகளோ, தேர்வுகளோ காரணமாக இருக்கும் பட்சத்தில் பெற்றோரின் கனிவான பேச்சும், உத்திரவாதமும் குழந்தைகளுக்கு உதவும். தண்டனை வழங்கக்கூடாது. பெரியவர்களே நகம் கடிக்கும் போது, குழந்தைகளுக்கு தண்டனை அளிப்பது தவறு. இப்பழக்கத்தில் இருந்து விடுபட ஆரம்பத்தில் நகம் கடிக்காமல் இருக்கும் நேரம் வரையறுக்கப்பட்டு, பின்பு இதை படிப்படியாக கூட்டி காலப்போக்கில் இப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட வைக்கலாம்.

பல குழந்தைகள் இப்பழக்கத்தை தன்னை அறியாமல் செய்கின்றன. பெற்றோர் விழிப்புடன் இருந்து பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கலாம். கதைப்புத்தகம், ஆரோக்கியமான விளையாட்டுக்களில் குழந்தைகளை கவனம் செலுத்த வைத்தல், விளையாட அழைத்து செல்வது உதவும்.

* என் மூன்றரை வயது குழந்தை சில சமயங்களில் இரவு நேரங்களில் காரணம் இல்லாமல் படுக்கையை விட்டு எழுந்து அழுகிறது. இது நோயின் அறிகுறியா?

இந்த வயதில் மிகவும் நன்றாக துாங்கும் குழந்தைகளுக்கு, அது சார்ந்த பிரச்னைகள் வருவது வழக்கம் தான். அக்குழந்தை உறங்கும் போது சிரமப்படுதல், படுக்கையை விட்டு எழுந்து அழுதல் போன்றவை பிரதிபலிக்கலாம். இதை இரவு 'துாக்க பயங்கரவாதம்' என்பர். இது துாக்கத்தில் நடப்பதை விட வியக்கத்தக்கது. இவ்வாறு செய்யும் குழந்தைகளின் பெற்றோர், குழந்தையிடம் சென்று சமாதானம் படுத்தலாம். அச்சமயத்தில் குழந்தைகளை எழுப்புதல், பெயர் சொல்லி அழைத்தல் கூட பயனளிக்காது. அப்போது குழந்தைகள் குழப்பத்துடனும், நிலை தவறியும் காணப்படும். எனவே தானாகவே குழந்தைகள் சமாதானம் அடையும் வரை பெற்றோர் பொறுமையாக இருத்தல் அவசியம்.

குழந்தைகள் உறங்குவதற்கு உதவியாக இருத்தல் வேண்டும். ஒரு சில சமயங்களில் குழந்தைகள் கெட்ட கனவுகளின் காரணமாகவோ, அதிக கற்பனை சிந்தனைகளினாலோ இவ்வாறு நடந்து கொள்ளலாம். அலைபேசி உபயோகித்தல், 'டிவி' பார்ப்பது, பெற்றோரை பிரியும் பயம், பரிணாம வளர்ச்சி, குழந்தையிடம் ஏற்படும் உடல் உபாதைகளாலும் இவ்வாறு நேரலாம். சீரான துாக்கப் பழக்கத்தை கற்பிப்பது பிரச்னைக்கு தீர்வாக அமையும்.

- டாக்டர் முருகன் ஜெயராமன்

குழந்தைகள் நல மருத்துவ நிபுணர், மதுரை

அலைபேசி: 90800 63459.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us