sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

புரதக்குறைவு கண்டறிவது எப்படி?

/

புரதக்குறைவு கண்டறிவது எப்படி?

புரதக்குறைவு கண்டறிவது எப்படி?

புரதக்குறைவு கண்டறிவது எப்படி?


PUBLISHED ON : அக் 01, 2017

Google News

PUBLISHED ON : அக் 01, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது உடலுக்கு, எல்லா சத்துக்களும் தேவை. ஒவ்வொரு சத்தும், உடலுக்கு பல்வேறு வகைகளில் வலு சேர்த்து, ஆரோக்கியமாக இயங்க உதவுகின்றன. சில சமயங்களில், எக்காரணமும் இல்லாமல், பெரிதாக எந்த ஒரு வேலையும் செய்யாமல் சோர்வாக உணர்ந்திருப்பீர்கள். கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை கூட பார்க்க முடியாது.

சிலர், ஏதோ இருதய பிரச்னை வந்துவிட்டது என எண்ணி அச்சம் கொள்வார்கள். இருதய பிரச்னை இருந்தால், இப்படி சோர்வு வெளிப்படும் தான்.

அதே சமயத்தில், உடலில் போதிய அளவு புரதச்சத்து இல்லை என்றாலும் கூட, காரணமே இல்லாமல் சோர்வாக உணர்வீர்கள். புரதம், உடலுக்கு எவ்வளவு முக்கியம், அதன் மூலம் என்னென்ன மாயங்கள் உடலில் நடக்கின்றன. புரதச்சத்து குறைபாட்டை வெளிப்படுத்தும் உடல் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து காண்போம்.

புரதத்தின் அவசியம்: தினமும் நமக்கு கிடைக்கும் சக்தியில், 15 சதவீதம் புரதத்தில் இருந்து தான் கிடைக்கிறது. தசை, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணமாக இருப்பது புரதம். தசை வலிமை அதிகரிக்க, உடல் எடை குறைக்க புரதம் அவசியம். உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் என்சைம்ஸ் தயாராக, புரதம் வேண்டும்.

உடல்நலம்: உடலில் புரதம் குறைந்துள்ளது என்பதை அறிந்துக் கொள்ள உதவும் முதல் அறிகுறி, நீங்கள் மிக எளிதாக உடல்நலம் குன்றி போவது தான். உங்கள் டயட்டில் போதியளவு ஊட்டச்சத்து இல்லை எனில், நோய் எதிர்ப்பு மண்டலம், தானாக வலுவிழந்து போய் விடும். நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம்

வலுவிழந்து போனால், உங்கள் உடல் மெல்ல, மெல்ல சேதமடைய துவங்கும்.

தசை வலிமை: புரதம் தான், தசை வளர்ச்சி மற்றும் தசை வலிமை காக்கும் சத்து. உங்கள் உடலில் புரதம் குறைந்து போனால், தசை வளர்ச்சியும், தசை வலிமையும் குறைந்து விடும். உடற்பயிற்சி கூடம் செல்பவர்களால் இதை எளிதாக அறிய முடியும். எனவே, உங்கள் உடலில் புரத சத்து சேர்த்துக் கொள்ள

வேண்டியது மிகவும் அவசியம். எளிதாக காயம் அடைவது, தசைப்பிடிப்பு ஏற்படுவது அதிகமாக இருந்தால், உடலில் புரதம் குறைவாக இருப்பதை அறிந்து கொள்ளலாம்.

நாள்பட்ட சோர்வு: மயக்கம் வருவது போன்று இருப்பது, சோர்வாகவே காணப்படுவது போன்றவை, உங்கள் டயட்டில் புரதம் குறைவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் மற்றுமொரு அறிகுறி ஆகும்.

சரும பிரச்னை: நமது சருமம் உருவாக, திசுக்கள் தான் காரணம். அதற்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அதில், முக்கியமான ஒன்று புரதம். உடலில் புரதம் குறைவாக இருந்தால், சருமத்தில் பிரச்னைகள் உண்டாவதை நீங்கள் அறியலாம். புரதம் குறைவாக இருந்தால், முடி வேர் வலுவிழந்து எளிதாக முடி உடையும், உதிரும் நிலையை நாம் காணலாம்.

கடைசியாக, உங்கள் முகத்தில் வயதை காட்டிலும் அதிக சுருக்கும் விழுவதை வைத்து, புரத சத்து குறைபாடு இருப்பதை அறிந்துக் கொள்ளலாம். உடலில் போதிய அளவில் புரதம் இல்லாத போது, மூட்டு வலியும் தசை வலியும் ஏற்படலாம். மூட்டுக்களில் உள்ள திரவத்தில் பெரும்பாலும் புரதங்களே அடங்கியுள்ளது. இந்த திரவம், மூட்டுகளுக்கு பலமூட்டி, தசைகளை மறுபடி வளர்ச்சியடைய செய்யும். புரத குறைபாடு இருக்கும் போது இந்த திரவத்தின்

உற்பத்தி குறைந்துவிடும். இதனால் மூட்டு மற்றும் தசை வலி உண்டாகும்.






      Dinamalar
      Follow us