தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மஞ்சளில் எவ்வளவு 'குர்குமின்' உள்ளது?

மஞ்சளில் எவ்வளவு 'குர்குமின்' உள்ளது?

மஞ்சளில் எவ்வளவு 'குர்குமின்' உள்ளது?


PUBLISHED ON : பிப் 28, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 28, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம்முடைய பாரம்பரிய வழக்கத்தில், மங்கலப் பொருளாகவும், கிருமி நாசினியாகவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன், வைரசை அழிக்கும் திறன் மஞ்சளுக்கு உள்ளதா என்று ஆராயப்பட்டது.கொரோனா வைரஸ், நுரையீரலை தாக்கும் போது, சுவாசப் பைகளில் வெடிப்பை ஏற்படுத்தி, ரத்தக் கட்டியை உண்டாக்கி, ரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணமே நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தான் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் நுரையீரல் இறுகி, சுவாசிக்க இயலாமல் இறப்பு நேரிடுகிறது. இதற்கு, 'சைட்டோகைய்ன் ஸ்டார்ம்' என்று பெயர். இந்த நிகழ்வு நடக்காமல், 'குர்குமின்' தடுப்பதாக, ஆரம்ப கட்ட ஆய்வு கள் தெரிவிக்கின்றன.அவசியம் இல்லை'ஜிகா, சார்ஸ், ஹெபடைடிஸ்' வைரஸ் கிருமிகள் பரவிய போது, மஞ்சள் நல்ல பலனை கொடுத்து உள்ளது; அதனால் தான், கொரோனா வைரசுக்கும் ஆய்வு செய்யப்படுகிறது.வேக வைத்து, காய வைத்து, பொடி செய்த மஞ்சளை விடவும், பச்சை மஞ்சள் கிழங்கில் தான் அதிக அளவு குர்குமின் உள்ளது.

ஒரு பச்சை மஞ்சள் கிழங்கில், 2 - 9 சதவீதம் குர்குமின் உள்ளது.மஞ்சளை தனியாக சாப்பிடுவதை விட, மிளகுடன் சேர்த்து பயன்படுத்தினால், அதில் உள்ள குர்குமினை முழுமையாக உடல் உறிஞ்சும். சித்த மருத்துவத்தில், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்தே பயன்படுத்தி உள்ளனர். குர்குமின் முழுமையாக உடலில் சேர, மிளகு மற்றும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம்.தினமும், 30 - 75 கிராம் மஞ்சள் சாப்பிட்டால், 2 - 9 சதவீதம் குர்குமின் கிடைக்கும்.மேலை நாடுகளில் மஞ்சள் விளைச்சல் கிடையாது என்பதால், இதில் உள்ள குர்குமினை தனியே பிரித்து, மாத்திரை வடிவில் பயன்படுத்துகின்றனர்; நமக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.நல்ல பலன்சித்த மருத்துவத்தில், நுரையீரல் பிரச்னை, சளி, ஆஸ்துமா, இருமல் இருந்தால், மஞ்சள், மிளகு பொடியை பாலுடன் சேர்த்து, குடிக்கச் சொல்வோம்.

சிறிது மஞ்சளுடன் மிளகு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து, உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் நீங்கும். தோல் வியாதி இருந்தால், மஞ்சளுடன் குப்பைமேனி இலை சேர்த்து அரைத்து, பிரச்னை உள்ள இடத்தில் பூசினால், நல்ல பலனை தரும்.தும்மல், மூக்கடைப்பிற்கு மஞ்சளை தீயில் சுட்டு, அதன் வாசனையை முகர்ந்தால், சரியாவதோடு, ஒற்றைத் தலைவலி குறையும்.மஞ்சளை தேய்த்து குளிப்பதால் தோல் ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் தொடர்ந்து மஞ்சள் சாப்பிடும் போது, மாதவிடாய் பிரச்னைகள், நீர்க்கட்டி வராது. இப்பிரச்னைகள் இருந்தால், விடாமல் மஞ்சளை சாப்பிட்டால், கோளாறு சரியாகி, சீரற்ற மாதவிடாய் சரியாகும்; ஹார்மோன் செயல்பாடும் சீராக அமையும்.

டாக்டர் ஜி.சதீஸ் குமார்,

சித்த மருத்துவர்,

சென்னை.

98400 25847

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us