தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பசும் பாலுக்கு மாற்றா பாதாம் பால்?

பசும் பாலுக்கு மாற்றா பாதாம் பால்?

பசும் பாலுக்கு மாற்றா பாதாம் பால்?


PUBLISHED ON : பிப் 28, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 28, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'குளூட்டன்' இல்லாத உணவுப் பொருட்கள் மட்டுமே, ஆரோக்கியத்தை தரக் கூடியவை என, பலரும் தங்களின் வலைதள பக்கங்களில் எழுதுகின்றனர்.

'கிளியாடின், குளூட்டலின்' என்ற புரதங்கள் நிரம்பியது குளூட்டன். இது அரிசி, கோதுமை, பார்லி போன்ற கார்போ ஹைட்ரேட் உள்ள தானியங்களில் உள்ளது; நம் ஆரோக்கியத்திற்கு எந்த விதத்திலும் கெடுதல் தரக் கூடியவை இல்லை.ஒரு சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கு, குளூட்டனால் அலர்ஜி ஏற்படுகிறது; அவர்கள் மட்டும், டாக்டரின் ஆலோசனையின்படி தவிர்த்தால் போதும்.

குளூட்டன் இல்லாத உணவு என்று, 'லேபிள்' ஒட்டி, 200 மடங்கு அதிக விலையில் விற்கின்றனர்; இது, வர்த்தகத்திற்கு பயன்படுமே தவிர, ஆரோக்கியத்திற்கு உதவாது. அடுத்த ஐந்து ஆண்டு களில், குளூட்டன் இல்லாத உணவுப்பொருள் விற்பனையை, 5,000 கோடி ரூபாயாக உயர்த்த, சர்வதேச சந்தையில் இலக்கு உள்ளது.உடல் எடையைக் குறைக்க, எவ்வளவு கலோரி சாப்பிடுகிறோம்; எத்தனை கலோரி செலவு செய்கிறோம் என்பதில் கவனமாக இருந்தால் போதும்.

குளூட்டன் இருக்கிறதா, இல்லையா என்று தேடி, உணவை தேர்வு செய்ய தேவை இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்வதில்லை.'பால் குடிக்கவே கூடாது. அதை செரிமானம் செய்யும் திறன், மனிதர்களின் செரிமான மண்டலத்திற்கு இல்லை' என்று வலைதள நிபுணர்கள் எழுதுகின்றனர்; அதற்கு மாற்றாக, பாதாம் பால், சோயா பால் குடிக்க சிபாரிசு செய்கின்றனர்.

வரும், 2025க்குள், பாதாம் பால் விற்பனை, 1,330 கோடி; சோயா பால் விற்பனை, 2,320 கோடி ரூபாய் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அதிலும், நம் நாட்டில் இருக்கும் பல ஊட்டச் சத்து நிபுணர்கள், 'வாஷிங்டன் பாதாமை தினமும் சாப்பிட வேண்டும்' என்று வலியுறுத்துகின்றனர்.

பசும் பாலை விட இவை சிறந்ததா... அறிவியல் உண்மை என்ன?



இதற்கு, அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பசும் பாலுக்கு மாற்று எதுவும் இல்லை என்பது தான், தற்போது வரை உள்ள ஆராய்ச்சி முடிவுகள்.

தவிர்க்க வேண்டியவை...



வெள்ளை நிறத்தில் இருக்கும் அனைத்தையும் தவிர்க்க வேண்டும் என்பது இன்னொரு ஆலோசனை.வெள்ளை நிறத்தில் உள்ள அரிசியையும், சிவப்பு நிற அரிசியையும், 'பாலீஷ்' செய்யாமல் உபயோகப்படுத்தும் பட்சத்தில், ஊட்டச்சத்தில் பெரிய வேறுபாடு இல்லை என்பது தான், ஆராய்ச்சியாளர்கள் சொல்வது; ஆனால், விலையில் நிறைய வித்தியாசம் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us