sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ஓய்வுக்குப் பின் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி: இதோ டிப்ஸ்

/

ஓய்வுக்குப் பின் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி: இதோ டிப்ஸ்

ஓய்வுக்குப் பின் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி: இதோ டிப்ஸ்

ஓய்வுக்குப் பின் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி: இதோ டிப்ஸ்


PUBLISHED ON : ஆக 11, 2024

Google News

PUBLISHED ON : ஆக 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பலர், தங்கள் பணி ஓய்வு காலம் நெருங்கும் போது, எப்போது அந்த நாள் வரும், இனியாவது ஓய்வு எடுக்கலாம் என்ற மனநிலையில் இருப்பார்கள்.

ஆனால் பணி ஓய்வுக்குப்பின், ஏண்டா ரிட்டையர் ஆனோம் என்ற மனநிலைக்கு தள்ளப்படுவர். காரணம், தனிமை தவிக்க விடும்; நோய்கள் வரிசைக்கட்டும்.

இதை தவிர்க்க, ஓய்வு பெறப்போகும் தங்கள் ஊழியர்களுக்கு, சில ஆலோசனைகளை வழங்குகிறார், ஐ.டி., நிறுவன மனிதவளத்துறையில் பணிபுரியும் பாரதி பிரியா.

* எங்கு பயணம் செய்தாலும், தனியாக செல்வதை தவிர்த்து மனைவியுடன் பயணம் செய்யுங்கள்.

* அத்தியாவசியம் இல்லாத போது, போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்து விடுங்கள். அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

* அதிக மொபைல் போன் பயன்பாடு அல்லது டி.வி., பார்ப்பதை தவிர்க்கவும்.

* அதிகமாக மருந்து உட்கொள்வதை தவிர்க்கவும். கூடுமானவரை கைவைத்தியத்தில் நலம் காண முயற்சியுங்கள்.

* தவிர்க்க முடியாத தருணங்களில், சரியான நேரத்தில் டாக்டர்களை சந்தித்து மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

* வெளியே செல்லும் போது, உங்கள் அடையாள அட்டையை எப்போதும் வைத்து கொள்ளுங்கள்.

* எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கடந்த காலத்தை பற்றிய யோசனை செய்ய வேண்டாம். இந்த கணம் தான் நிஜம். இந்த கணத்தை ஆனந்தமாக அனுபவியுங்கள்.

* குளியலறை மற்றும் கழிப்பறையில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக இருங்கள்.

* ஓய்வுக்குப் பின் சில வருடங்கள் பயணம் மேற்கொள்ளுங்கள். கூட்டம் அதிகம் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டாம்.

* உங்கள் திறன் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்கள்.

* உங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்னைகள் இருந்தால், தலைகீழாக நிற்கும் பயிற்சி (ஹெட்ஸ்டாண்ட்) மற்றும் மூச்சு பயிற்சி (கபாலபதி) செய்யாதீர்கள்.

* உங்களின் ஓய்வு கால சேமிப்பை, அடுத்த தலைமுறைக்கு கொடுக்காதீர்கள்.

* துாங்க முடியாவிட்டால், மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.

* உடல்நிலை குறித்து தொடர்ந்து புகார் செய்யாதீர்கள்.

* மனைவியுடன் தகராறு செய்வதை, இனிமேலாவது கைவிடுங்கள். அவர்தான் உங்களுக்கு இனி எல்லாம் என்பதை மறந்து விடாதீர்கள்.

* எப்போதும் முகத்தில் புன்னகையுடன், மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழுங்கள்.






      Dinamalar
      Follow us