வாழ்க்கை முழுதும் கொழுப்பு நிறைந்த உணவே தரக்கூடாது...!
வாழ்க்கை முழுதும் கொழுப்பு நிறைந்த உணவே தரக்கூடாது...!
PUBLISHED ON : ஆக 11, 2024

எங்கள் மையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, பிறந்தவுடன் 'நியூ பார்ன் ஸ்கிரீனிங்' செய்வோம். எதிர்காலத்தில் என்ன மாதிரியான உடல், மனப் பிரச்னைகள் வரும் என்பதைக் கண்டறிந்து, அதைத் தடுக்கத் தேவையான சிகிச்சைகள் செய்வதுதான் இதன் நோக்கம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிட்டது.
அதன் அடுத்தகட்டமாக, வருமுன் காக்கும் விதத்தில், உடல் கோளாறுகள் இல்லாத குழந்தைகள் இருக்கும் மாநிலமாக நாம் மாற வேண்டும். அதற்கு இந்த நியூ பார்ன் ஸ்கிரீனிங் அவசியம். எங்கள் மையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இதைச் செய்கிறோம்.
எப்படி செய்வது?
குழந்தை பிறந்த 24 - 48 மணி நேரத்திற்குள், குழந்தையின் குதிகாலில் இருந்து மூன்று சொட்டு ரத்தம் எடுத்து சோதனைக்கூடத்தில் டி.எம்.எஸ்., என்ற பரிசோதனை செய்வோம். பொதுவாக என்ன பிரச்னைக்கு டெஸ்ட் எடுக்கிறோமோ அதற்கான முடிவுகள்தான் வரும். ஆனால், டி.எம்.எஸ்., பரிசோதனை கருவியில், ஒரே நேரத்தில் பல்வேறு உடல் பிரச்னைகளை அறிய முடியும்.
உணவில் இருக்கும் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்போன்ற சத்துக்கள், ரத்தத்தில் கலந்து, என்சைம்கள் உதவியுடன் உடைந்து சக்தியாக மாறுவதில் உள்ள பிரச்னைக்கு ஐ.ஈ.எம்., - இன்பார்ன் எரர்ஸ் ஆப் மெட்டபாலிசம், அதாவது வளர்சிதைவு நோய் என்று பெயர்.
பச்சிளங் குழந்தைக்கு உணவு தாய்ப்பால். இதில் புரதம், கொழுப்பு உட்பட எல்லா சத்துக்களும் இருக்கும். உணவு குடலில் சென்று செரிமானம் ஆனதும், அதில் உள்ள சத்துக்கள் சிறிய வேதிப்பொருட்களாக உடைந்து, ரத்தத்தில் கலந்து, என்சைம்கள் உதவியுடன் சக்தியாக மாறும். இந்த நிகழ்வு உடலில் உள்ள அனைத்து செல்களிலும் நடக்கும். சில குழந்தைகள் பிறக்கும்போதே என்சைம்கள் இல்லாமல் பிறக்கும்.
சத்துக்கள் உடைவதில் பிரச்னை இருந்தால், இயல்பாக நடக்கும் மெட்டபாலிசம் எனப்படும் உடலின் உள்செயல்பாடுகளால், அமினோ அமிலம், ஆர்கானிக் அமிலம் போன்றவை சக்தியாக மாறாமல் அபப்டியே தங்கி விடும். இதனால், உள் செயல்பாடுகளைப் பொருத்து, மூளை, இதயம், கல்லீரல் என்று எந்த உறுப்பையும் பாதிக்கலாம்.
இதில், 20க்கும் அதிகமான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். எவ்வித உடல் ஊனமும் இவர்களுக்கு இல்லை.
மெட்டபாலிக் கோளாறுகள் எல்லாமே மரபியல் சார்ந்தவை. இந்த 14 குழந்தைகளுக்கும் வேறு வேறு உடல் பிரச்னைகள் இருந்தன. அதில் ஒன்பது குழந்தைகளுக்கு பொதுவான பயோட்டின் என்கிற குறைபாடு. பயோட்டின் என்பது விட்டமின் ஹெச். தினமும் 10 மி.கிராம் பயோட்டின் கொடுத்தால் போதும். இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. அதிகப்படியான பயோட்டின் சிறுநீரில் வெளியேறி விடும். மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
இதுதவிர, கொழுப்பு சார்ந்த, உடலில் தக்கவைக்க முடியாமல், சிறுநீரில் வெளியேறும் கார்னிடின் என்கிற கோளாறை கண்டுபிடித்து உள்ளோம். இதனால் இதயக்கோளாறு வரலாம். கார்னிடின் வாழ்க்கை முழுதும் கொடுக்க வேண்டியிருக்கும்.
இதயம், கல்லீரல் போன்ற அதிக சக்தி தேவைப்படும் உறுப்புகளை பாதிக்கும் வி.எல்.கேட் என்கிற நீண்ட சங்கிலி கொழுப்பு அமில கோளாறுகளும் நியூ பார்ன் ஸ்கிரீனிங்கில் தெரிய வந்துள்ளது. இந்த குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முழு கொழுப்பு உள்ள உணவுகளை தரக்கூடாது.
குழந்தை பிறந்ததும் கை, கால் நன்றாக அசைத்து, அழுது, பால் குடித்து என்று இயல்பாக இருக்கும்போது, ஸ்கிரீனிங் செய்வது பற்றி யாரும் யோசிக்கவே மாட்டார்கள். வேதியியல் மாற்றங்களால் வரும் உடல் கோளாறுகளை பரிசோனை செய்து பார்த்தால் மட்டுமே கண்டுபிடித்து, எதிர்காலத்தில் வரும் கோளாறுகளை தவிர்க்க முடியும்.
டாக்டர் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன், தலைவர்,
பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பிரிவு,
ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம், ஆராய்ச்சி பிரிவு,சென்னை044-45928500medicaldirector@sriramachabra.edu.in