PUBLISHED ON : டிச 22, 2024

மனஅழுத்தம் உருவாக எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் மலச்சிக்கல் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மலச்சிக்கல் வந்த பின் கவனிக்காமல் விட்டால் ரத்தசோகை, முகவீக்கம், இதய வீக்கம், கால் வீக்கம், சுறுசுறுப்பின்மை போன்ற பிரச்னைகள் உருவாகும்.
மலச்சிக்கலை கவனிக்காமல் விட்டால் ரத்தம் கொட்டும் மூலநோயாக மாறிவிடும். மூலம், பவுத்திரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சேதாரம் இன்றி லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்தி அறுவை சிகிச்சையில் இருந்தும் வலியில் இருந்தும் விடுபடலாம். மதுரையில் முதன்முதலில் மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள விநாயகம் மருத்துவமனையில் லேசர் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலான மாதங்களில் அனைவருமே வெப்ப தாக்குதலுக்கு உள்ளாகிறோம். வெப்பம் அதிகரிப்பதால் உடல்ரீதியான பிரச்னைகளும் அதிகரிக்கின்றன. தினமும் உண்ணும் உணவு செரிமானமாகி குடலை விட்டு வெளியேறினால் உடலுக்கு நோய் வராது. குடலின் வெப்பம் அதிகரிப்பதால் அதன் இயங்குதன்மை குறைந்து விடும். இதனால் மலத்தை இளக்கி வெளியேற்றும் திறனில் குறைபாடு ஏற்பட்டு மலச்சிக்கலாக மாறுகிறது.
மலச்சிக்கல் முற்றிய நிலையில் ஆசனவாயின் ரத்தக்குழாய்கள் தடித்து சிறிய வீக்கம் தோன்றும். இதுதான் மூலத்தின் அடையாளம். இந்த கட்டிகள் முற்றும் நிலையில் ஆசனவாய் அடைபட்டது போல தோன்றும். மலம் சரியாக வெளியேறாமல் எரிச்சல், வலி அதிகரிக்கும். உடல் அசதி, வயிறு உப்பிய உணர்வு, உட்கார முடியாத நிலை, உடல் ஒத்துழைப்பின்மை அதிகரிக்கும்.
சரியான சிகிச்சை பெறாவிட்டால் அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். ஆசனவாயின் வெளிப்பகுதியில் புண் தோன்றி சீழ் பிடிக்கும். இந்த மூலநோய் கட்டிகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவர். காயம் ஆறும் வரை வழக்கமான வேலையில் ஈடுபட முடியாத அளவு புண்ணும் வலியும் அதிகமாக இருக்கும். அறுவை சிகிச்சைக்கு மாற்றான முறை தான் லேசர் சிகிச்சை.
வலியில்லா சிகிச்சை முறை
லேசர் சிகிச்சையில் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் லேசர் கதிர்வீச்சு மூலம் ஆசனவாய் பகுதியில் உள்ள திசுக்கள் வலியின்றி அகற்றப்படும். லேசர் கதிர்வீச்சின் போது அந்த இடத்தில் துளி ரத்தம் கூட வெளியே வராது. சிகிச்சை முடிந்தவுடன் வழக்கமான வேலைகளை செய்யலாம்.
மூலநோய் வராமலிருக்க நார்ச்சத்து நிறைந்த காய்கறி, கீரை, பழங்கள், உலர் பருப்புகள் சாப்பிட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். புரோட்டா, பிரியாணி, இறைச்சி வகைகளை குறைத்துக் கொள்வதோடு இரவில் இவற்றை சாப்பிடக்கூடாது. எளிதில் செரிமானம் ஆவதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டால் மனப்பதட்டத்தை குறைக்கலாம். மலத்தை அடக்காமல் காலையில் வெளியேற்றுவதை பழக்கமாக கொண்டால் மூலம், பவுத்திரம் வராமல் தடுக்கலாம்.
- டாக்டர் சந்தியா ராஜேந்திரன்
குடல்நோய் சிகிச்சை நிபுணர்
மதுரை.
91763 74194