தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது எப்படி ?

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது எப்படி ?

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது எப்படி ?


PUBLISHED ON : டிச 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று பல்வேறு நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தினாலும், சிறுநீரக கற்கள் ஏற்படுத்தும் பாதிப்பு, அதனால் ஏற்படும் வலி என்பது, யாராலும் தாங்க முடியாத ஒன்றாக உள்ளது. முறையாக தண்ணீர் குடித்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் தினகர் பாபு.

சிறுநீரக கற்கள் என்றால் என்ன?

சிறுநீரகக்கல் என்பது, சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.சிறுநீரக கற்கள் எதனால் ஏற்படுகிறது?நீராகாரங்கள் குறைவாக எடுத்துக் கொள்வது, அசைவ உணவுகளை அதிகமாக உட்கொள்வது, காளான், காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, கீரை வகைகளை அதிகமாக உட்கொள்வதால், சிறுநீரக கற்கள் ஏற்படுகின்றன.

யாருக்கு இதன் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது?

மக்கள் தொகையில், 15 - 20 சதவீதம் பேர் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். சாதாரணமாக, 20 முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். திரும்பத் திரும்ப ஏற்படும் தன்மையுடையது.



சிறுநீரக கற்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன?

பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி, குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் அளவு அதிகரித்தல், சிறுநீரில் ரத்தம் காணப்படுதல், அடிவயிற்றில் வலி, வலியோடு சிறுநீர் கழித்தல், இரவு நேரத்தில் அதிகளவு சிறுநீர் கழித்தல், சிறுநீரின் நிறம் இயற்கைக்கு மாறாக காணப்படுதல் ஆகியவை அறிகுறிகள்.

சிறுநீரக கற்கள் ஏற்படுவதை எப்படி தடுப்பது?

சிறுநீரக கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின், அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு, 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரக கற்களின் தன்மையை பொருத்து, மருத்துவரின் ஆலோசனையின்படி, மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாண்டு, கற்கள் திரும்பத் திரும்ப ஏற்படுவதை தடுக்கலாம்.



இதற்கு என்ன சிகிச்சைகள் உள்ளன?

அண்மைக் காலமாக சிறுநீரகச் சிகிச்சையில், துளை வழி கல் உடைத்தல் சிகிச்சை, முக்கியமாக கையாளப்படுகிறது. சிறுநீர்ப் பாதையில் அடைப்பு இல்லாவிட்டால், கல் நொறுக்கி சாதனங்கள் மூலம் அதிர்வலைகளை ஒருமுனைப்படுத்தி உட்செலுத்துவதன் மூலம், சிறுநீரகங்களுக்கோ, திசுக்களுக்கோ, வேறு எந்த உறுப்புகளுக்குமோ, பாதிப்பற்ற முறையில் கற்களை மட்டும் அதிர்வலைகள் (லேசர்) தாக்கி பொடியாக்கி விடும். பொடித்துகள்கள் சிறுநீரில் கரைந்து வெளியேறி விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us