PUBLISHED ON : மார் 30, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரசாந்த், விருதுநகர்: எனக்கு இருமல் அதிகமாக இருக்கும் போது, கண்ணை கட்டி மயக்கம் வருகிறது. சில நேரம் தலைசுற்றி கீழே விழுகிறேன். இது ஏன்?
நாம் தொடர்ந்து இருமும் போது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்து விடும். மூளைக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனுடைய அளவு குறையும். அவ்வாறு குறையும்போது மயக்கம் ஏற்படுகிறது. இதை 'காப் சிங்கோப்' என்பர். இருமல் எதனால் வருகிறது என கண்டறிந்து, சரியான மருந்துகள் கொடுத்தால் போதும். இருமல் சரியாகிவிட்டால், மயக்கம் வருவதும் குறைந்து விடும்.

