PUBLISHED ON : நவ 18, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எஸ். ராஜேஷ், பரமக்குடி: எனது வயது 37. ரெகுலர் செக்கப் செய்தபோது, என் உடலின் ரத்த அழுத்தம் 180/100 ஆக உள்ளது. எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. நான் என்ன செய்வது?
முப்பத்தேழு வயதில் 180/100 என்பது, மிக ஆபத்தானது. உடனடியாக உங்களுக்கு, பல பரிசோதனைகள் தேவை. ரத்தம், சிறுநீர், இ.சி.ஜி., எக்கோ, வயிறு ஸ்கேன் ஆகியவை அவசியம். இதுதவிர, உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, மருத்துவரை ஆலோசித்து, மருந்துகளை வேளை தவறாமல் எடுக்க வேண்டும்.