தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மார்பக புற்று நோய் வந்தால்...

மார்பக புற்று நோய் வந்தால்...

மார்பக புற்று நோய் வந்தால்...


PUBLISHED ON : ஆக 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட விபத்தால் அறுவை சிகிச்சை மூலம் செயற்கையாக வலது கை பொருத்தியதில், விரல்கள் அசைக்க முடியாததற்கு காரணம் என்ன?

தற்போது செயற்கை கைகளில் சாதாரண கைகளை போல் விரல்களை இயக்கும் வசதிகளுடன் சாதனங்கள் வந்துள்ளன.நீங்கள் அதை பொருத்திக்கொண்டால் விரல்களை சாதாரண கைபோல் நன்றாக இயக்க முடியும்.

* என் 3 வயது குழந்தை ஊட்டச்சத்து குறைவால் கல்லீரல் பாதித்துள்ளதற்கு சிகிச்சை உண்டா?

கல்லீரல் முழுமையாக பாதித்த குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக தாய், தந்தையிடமிருந்து கல்லீரலின் ஒருபகுதியை பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் உங்கள் குழந்தைகளை முழுமையாக குணப்படுத்தலாம்.

* நான் 5 ஆண்டுக்கு முன் ஒரு மார்பக புற்றுநோய் பாதித்து அறுவை சிகிச்சை செய்தேன். ஒரு மார்பகத்தின் மூலம் குழந்தைக்கு பால் தரலாமா?

மார்பக புற்றுநோய் வந்து குணமடைந்தவர்கள் மற்ற சாதாரண பெண்களைபோல் நலமுடன் வாழ்ந்து எல்லா செயல்களிலும் ஈடுபடலாம். நீங்கள் நிச்சயமாக உங்களது வலது மார்பகத்தின் மூலம் குழந்தைக்கு பால் கொடுக்க முடியும்.

* எனக்கு சிறுவயதில் கீழே விழுந்ததில் பல் உடைந்து தங்க பல் கட்டியுள்ளேன். இதனால் பாதிப்பு வருமா?

தங்கப்பல்லினால் உங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாது. ஆனால் அது கூர்மையாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். கூர்மையான பற்கள் அடிக்கடி உராய்வதால் வாயில் புண் ஏற்பட்டு அது பிற்காலத்தில் புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உள்ளது.

* எனக்கு சில மாதங்களுக்கு முன் 'பரோட்டிட்' என்ற எச்சில் சுரப்பியில் கட்டி ஏற்பட்டு கதிரியக்க சிகிச்சையில் சரிசெய்தேன். தற்போது எச்சில் சரியாக ஊறாததற்கு காரணம் என்ன?

எச்சில் சுரப்பிக்கு கதிரியக்க சிகிச்சை பெற்றவர்களுக்கு 6 மாத காலங்கள் முதல் ஒரு ஆண்டுவரை எச்சில் சரியாக சுரக்காது. அதற்காக எச்சில் சுரப்பு மாத்திரைகளை நீங்கள் தற்காலிகமாக உபயோகிக்கலாம். சிறிது காலத்தில் எச்சில் சுரப்பது தானாகவே சரியாகும்.

*எனக்கு 6 மாதங்களுக்கு முன் தைராய்டு சுரப்பிக்கான அறுவை சிகிச்சை செய்தோம். அப்போது என் குரல்வளை அறுந்துவிட்டதை சரி செய்ய முடியுமா?

தைராய்டு அறுவை சிகிச்சை செய்யும்போது குரல்வளை நாண் பாதிக்கப்பட்டு குரல் மாற்றம் அடைந்தவர்களுக்கு தற்போது எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் முழுவதும் சரிசெய்து நன்கு பேச வைக்கலாம்.

- டாக்டர் மோகன்பிரசாத், புற்றுநோய் சிறப்பு நிபுணர், மதுரை

அலைபேசி: 98430 50822


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us