
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லிகா, விருதுநகர்: நான் இளைப்புக்காக தொடர்ந்து மருந்துகள் எடுத்து வருகிறேன். தற்போது எனக்கு சின்னம்மை வந்துள்ளது. இப்போது இன்ஹேலரை உபயோகிக்கலாமா?
கண்டிப்பாக இன்ஹேலரை நிறுத்தக் கூடாது. கோடை காலங்களில் இந்த சின்னம்மை பரவலாக காணப்படும். இது வைரஸ் நோய் கிருமியால் ஏற்படுவது. இதன் தாக்கம் 10 நாட்கள் இருக்கலாம். இதற்கான மருந்துடன், ஏற்கனவே ஆஸ்துமா, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றிற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டால், அதை தொடர்ந்து எடுக்கலாம்.

