PUBLISHED ON : ஏப் 13, 2014
புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், வாழும் வரை, வலி இல்லாமல் வாழ்வதற்கு, மாத்திரை, அறுவை சிகிச்சை போன்றவற்றால் தீர்வு அளிக்க முடிவதில்லை. இத்தகைய நிலையில், ஒரே ஒரு ஊசி மூலம், அவர்கள் வலியில்லாமல் வாழ வழி கிடைக்கிறது
மருத்துவத்தில், 'வலி நிர்வாகம்' என்று சொல்லப்படுகிற, 'இன்டர்வென்ஷனல் பெயின் மேனேஜ்மென்ட்' என்ற முறையின் மூலம், தலைவலி துவங்கி, புற்று நோயால் ஏற்படக் கூடிய வலிகள் வரை, அனைத்து வலிகளுக்கும், குறைந்த செலவில், எந்த பக்கவிளைவும் இல்லாமல், ஒரேயொரு ஊசியின் மூலம், உரிய நிவாரணம் அளித்து விட முடியும்.
வெளிநாடுகளில், கடந்த சில ஆண்டுகளாக, இது பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்தியாவில், கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாகத் தான், இத்துறை பரவலாக வளர்ச்சியடைந்து வருகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வலிகளுக்கும், ஒரே ஒரு ஊசியின் மூலம் நிவாரணம் அளிக்கும் இந்த சிகிச்சைக்கு, ஓரிரு நாட்களே போதுமானது. முதுகுத் தண்டுவடத்தில், ஜவ்வு பிதுங்கி, கடுமையான வலி உண்டாகிறது. இதற்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்வதை விட, வலி நிர்வாக முறைப்படி, 'ஹைட்ரோசிஷன்' என்ற ஒரு ஊசி கொண்டு, சுலபமாக நிவாரணம் பெற முடியும்.
'அலர்ஜியாட்ரி' தொழில்நுட்பம்: புற்றுநோயால், கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள், வாழும் வரை, வலி இல்லாமல் வாழ்வதற்கு, மாத்திரை, அறுவை சிகிச்சை போன்றவற்றால், தீர்வு அளிக்க முடிவதில்லை. இத்தகைய நிலையில், ஒரே ஒரு ஊசி மூலம், அவர்கள் வலியில்லாமல் வாழ வழி கிடைக்கிறது. மெனோபாஸ் காலத்தில், பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் உண்டாகும்; உடலில் சுண்ணாம்புச் சத்து குறைய ஆரம்பிக்கும். கர்ப்பப்பை நீக்கிய பெண்களுக்கும், இதே பிரச்னை வரும். இந்த புதிய சிகிச்சை முறை மூலம், சுண்ணாம்புச் சத்தின் அளவை, குறைய விடாமல் தடுத்து, இந்தப் பாதிப்புகளில்இருந்து, அவர்கள் தப்பிக்கலாம். இதற்கு ஆகும் செலவு, அறுவை சிகிச்சைக்கான செலவுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவே. முழங்கால் மூட்டுவலி, இடுப்பு வலி, தண்டு வட பாதிப்புகளுக்கு, 'அலர்ஜியாட்ரி' தொழில்நுட்பம் மூலம், ஒரே ஒரு ஊசி போட்டு, நிரந்தர தீர்வு காண முடியும்.
கிளாஸ் - 4 லேசர்: இதற்காக, கிளாஸ் - 4 லேசர், ஸ்பைன் ஜெட், அல்ட்ரா சவுண்ட் நெர்வ் பிளாக் ஆகிய பிரத்யேகக் கருவிகள், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இதில், ஸ்பைன் ஜெட் எனும் கருவி, கிளாஸ் - 4 லேசர் கருவி, நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்து, வெகு சில மாதங்களே ஆகின்றன.
உதாரணமாக, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு பிரச்னைகளுடன், 80 வயதுள்ள ஒருவருக்கு, அறுவை சிகச்சை செய்வது என்பது, அவ்வளவாக சாத்தியம் இல்லை. அத்தகையவர்களுக்கு, கிளாஸ் - 4 லேசர் உபகரணம் மூலம், எவ்வித வலியுமின்றி, 15 நிமிடங்களில் சிகிச்சை அளிக்க முடியும். உடலுக்கு மேற்புறத்திலேயே, லேசர் தெரபி மூலம், சிகிச்சை அளிக்க முடியும் என்பதால், ஊசிக்கு வேலையே இல்லை. தலைவலி முதல், அனைத்து வலிகளுக்கும், கிளாஸ் - 4 லேசர் சிகிச்சை பெறலாம்.
தண்டுவடத்தில், ஜவ்வு பிதுங்கிய பிரச்னைகளுக்கு, சிகிச்சை அளிக்க, ஸ்பைன்ஜெட் உபகரணம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், ஒரு சிறு ஊசியை பயன்படுத்தி, அதன் வழியாக பிதுங்கிய ஜவ்வு மீது, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வேகமாகப் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. மறுமுனையில், பிதுங்கிய ஜவ்வு அகற்றப்பட்டு, பழைய நிலைக்கு சரி செய்யப்படுகிறது. நேயாளிகள், ஓரிரு நாளில் இந்தச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பலாம்.
'அல்ட்ரா சவுண்ட் நெர்வ் பிளாக்' எனும் கருவி மூலமாக, வலி உணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பைக் கண்டறிந்து, அவற்றை செயலிழக்கச் செய்வதால், வலியை சரி செய்வதோடு, வலிக்கான காரணத்தையும் கண்டறிந்து, அதற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு, முதுகுத்தண்டில், பயங்கர வலி வரும். முதுகுத்தண்டில் உள்ள டிஸ்க்கில் ஏற்பட்ட வீக்கத்தினால், அந்த அவதி ஏற்படும். இத்தகைய வலிக்கு காரணம், 'ஸ்லிப்டு டிஸ்க்!' இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கால்களில் வலி பரவும். கால்கள் மரத்துப் போகும். இதே பிரச்னை, கழுத்துப் பகுதியில் இருக்குமானால், கைகளில் வலி பரவும்.
இந்த மாதிரியான பிரச்னைகளை, முழுவதுமாக சரி செய்கிற, 'ஹைட்ரோசிஷன்' என்ற சிகிச்சை மூலம், தூய நீரை, வேகமாக, ஒரு சிறிய ஊசி மூலமாக,
சவ்வுகளுக்குள் பீய்ச்சியடித்து, பிதுங்கி இருக்கிற சவ்வு, அதே ஊசி மூலமாக உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
'நியூக்ளோபிளாஸ்டி': இதே போல், 'நியூக்ளோபிளாஸ்டி' என்றொரு அதி நவீன சிகிச்சை முறை, ஐரோப்பா மாதிரியான நாடுகளில், பிரபலமாக இருக்கிறது. இன்னும் சில நவீன சிகிச்சை முறைகளான, 'ரேடியோ ப்ரீக்வென்சி அப்லேஷன்' மற்றும், 'ஓசோன்' சிகிச்சைகளும், நல்ல பலன்களை அளிக்கும். தகுந்த கருவிகளால், ஆக்சிஜனை, ஓசோனாக மாற்றி, அதை, ஊசி மூலம் உடலில் செலுத்துவது தான், 'ஓசான் தெரபி!' அனைத்து விதமான, நாள்பட்ட வலிகளுக்கும், இது நல்ல தீர்வு.
தண்டுவடப் பிரச்னை எனில், 'ஓசோன் ஊசி' மருந்து, அதில் பிதுங்கி இருக்கும், ஜவ்வை சுருங்க வைக்கும்; மூட்டுவலிப் பிரச்னை எனில், அதில் தேய்ந்த ஜவ்வை வளரச் செய்யும். இந்த சிகிச்சை முறைகள் எல்லாம், சர்க்கரை நோயாளிகளுக்கும், வலியின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்.
'மையோபிரைட்டிஸ்': டிரைஜெமினல் நியுரால்ஜியா, கிளோசோபாரின்ஜியல் நியூரால்ஜியா போன்ற முகவலிகள் ஏற்படும் போது, அதை, ஆர்.எப்.ஏ., முறை மூலமாகக் குணப்படுத்தலாம். பைப்ரோமையால்ஜியா தாக்குபவர்களில், 80 சதவீதத்தினர் பெண்களே. தலை முதல், கால் வரை, வெவ்வேறு இடங்களில் தோன்றும் வலி, சோர்வு, தலைவலி, ஞாபகமறதி, தூக்கமின்மை காரணமாக, புத்துணர்ச்சி இல்லாமலே, காலையில் எழுவது, இவையெல்லாம் இதன் அறிகுறிகள்.
மருத்துவத்துறையில் முன்பு, 'மையோபிரைட்டிஸ்' என்றழைக்கப்பட்ட தலைவலிக்கு தான், இப்போது, 'பைப்ரோமையால்ஜியா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, தூக்கம் வெகுவாகக் குறைவதால், அதன் பக்கவிளைவாக, மன அழுத்தமும் ஏற்படும். இந்நோய்க்கான காரணம், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம், இந்த நோய் உள்ளவர்களுக்கு மூளையில், 'செரடோனின்' என்ற வேதிப்பொருளின் அளவு குறைந்திருப்பதும், Substance P என்ற வலி உண்டாகக்கூடிய வேதிப்பொருள், தண்டுவடத்தில் அதிகம் இருப்பதையும், வல்லுனர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்களையும், மூட்டு நோய் தாக்கியவர்களையும், 'பைப்ரோமையால்ஜியா' பாதிக்கும் வாய்ப்பு அதிகம். இடுப்பில் வலி ஏற்பட, பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, Facet Pain எனப்படும், தண்டுவடத்தில் உள்ள எலும்புகளில் ஏற்படும் உராய்தலால் வலி உண்டாகும். எலும்புகளில் ஏற்படும் தேய்மானமும், சில மாற்றங்களும், குறிப்பாக, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் (OA) எனப்படும், குருத்தெலும்புத் தேய்மானம், முழங்கால்களை அதிகமாகப் பாதிக்கும்.
Ankylosing spondylosis எனப்படும் தம்பமுள்ளந்தண்டு அழற்சியினால், பாதிக்கப்படுபவர்கள், மூட்டுகளை இயல்பாக மடக்கவோ, நீட்டவோ, இயக்க முடியாது. ஒரு Robotடைப் போன்ற அசைவுகளுடன் இயங்க வேண்டியிருக்கும். இதை மாற்றவும், அசைவுகளுடன் இயங்க வேண்டியிருக்கும். இதற்கு பல விதமான நவீன சிகிச்சைகள் வந்துள்ளன.
சோரியாடிக் அர்த்திரைட்டிஸ்: சோரியாசிஸ் எனும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களும், மூட்டுகளில் எலும்புத் தேய்மானங்களுக்கு உள்ளாவர். இதை, சோரியாடிக் அர்த்திரைட்டிஸ் என்பர். இதற்கான, நவீன வலி நிவாரணத் துறையில், புதிய சிகிச்சை முறைகள் வந்துள்ளன. இளைஞர்கள், முதியவர்கள் என, யாராக இருப்பினும், மூட்டுகளில் எலும்புத் தேய்மானம் மட்டுமின்றி, தசைநார் சிதைவு (Ligament tear)ம் வலி ஏற்படக் காரணமாக இருக்கும்.
இது பொதுவாக, விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுவதுண்டு. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, அதி நவீன சிகிச்சை முறையே, ப்ளூரோதெரபி.
டாக்டர் பிரபு திலக்,
விஜய் நர்சிங் ஹோம், 39, மேற்கு சாலை, மேற்கு சி.ஐ.டி., நகர், நந்தனம்,
சென்னை - 35
போன்: 98407 88888.
இ-மெயில்: prabhuthilaak@gmail.com

