PUBLISHED ON : ஏப் 17, 2022

ஆக்சிஜனும், ஊட்டச்சத்துக்களும் ரத்த நாளங்கள் வழியாகவே உடல் முழுதும் செல்கின்றன. 60, 70 வயதைக் கடந்த சிலர், வயதிற்கு ஏற்ற வயோதிகத்துடன் இல்லாமல், இளமையாக இருப்பதைப் பார்த்து, 'வயதே தெரியலையே' என்று சொல்வோம்.
அவர்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக, தலை முதல் கால் வரை தடங்கல் இல்லாத, சீரான ரத்த ஓட்டத்துடன் இருப்பதே இதற்கு காரணம். உடற்பயிற்சி போன்ற அதிக உடல் உழைப்பு இருக்கும் சமயங்களில் ரத்தக் குழாய் விரிவடைந்து, மற்ற நேரங்களில் சுருங்கும்.
நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சிகரெட், உடல் பருமன், உடலுழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, சுருங்கி விரியும் தன்மை குறைந்து, செல்களுக்கு போதுமான ஆக்சிஜனும், ஊட்டச் சத்துக்களும் கிடைப்பதில்லை.
உடல் பருமன் அதிகம் இருந்தால், ரத்த நாளங்களை அதிகம் பாதிக்கும். ரத்த நாள அடைப்பால் அதிகம் பாதிக்கப்படுவது கால்கள். அதனால், தினமும் நடை பயிற்சி செய்து, கால்களில் ரத்தம் ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
-பிட் லாக்
