PUBLISHED ON : ஏப் 17, 2022

'ஆன்டிபயாடிக்' மருந்துகளுக்கு எதிராக, பாக்டீரியா கிருமிகள் வலிமை பெற்றதால், 22 லட்சம் பேர் உயிர் இழந்திருக்கின்றனர். 2019ல், 204 நாடுகளில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இதை உறுதி செய்கின்றன.
கடந்த 80 ஆண்டுகளாக, ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. அப்போது இருந்ததைக் காட்டிலும், அதிக அளவில் இந்த மருந்துகள் நம்மிடம் தற்போது உள்ளன. மருந்துகள் அதிகமாக அதிகமாக கிருமிகளின் வலிமை, புத்திசாலித்தனம் அதிகரித்தபடியே போகிறது.
கிருமிகள் வலிமை பெற்று விட்டால், அதற்கு தீர்வே கிடையாது. ஆன்டிபயாடிக் மருந்துகள் இருந்தாலும், அதனால் உபயோகம் இல்லாமல் போய்விடும்.
வைரஸ் தொற்றிற்கு, பாக்டீரியா தொற்றிற்கான மருந்து பயன்படுத்தக் கூடாது என்பதே புரிவதில்லை. கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தியதால், பாகிஸ்தான் மக்களுக்கு டைபாய்டு பாதிப்பு வந்தால், தற்போது உள்ள எந்த மருந்தாலும் சரி செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது.
பல நாடுகளில், குறிப்பிட்ட சில ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமே பலன் தருகின்றன. சுவீடன், பின்லாந்து, நார்வே நாடுகளில் இதன் பயன்பாடு குறைவு; அதனால் தான் அவர்களின் உடல் நலம் நன்றாக உள்ளது.
இருமல், சளி, காய்ச்சல், சாதாரண வாந்தி, பேதி, லேசாக அடிபட்ட காயம் போன்றவற்றிற்கு ஆன்டி பயாடிக் பயன்படுத்த தேவையில்லை என்ற விழிப்புணர்வை, தாய்லாந்து மக்களிடம் ஏற்படுத்தி, அந்த நாட்டில் இதன் பயன்பாட்டில், 45 ஆயிரம் டன் மருந்தை குறைத்து உள்ளனர்.
-தி லான்செட் பத்திரிகை
