தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நோய் எதிர்ப்பு சக்தி: நுரையீரல் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி: நுரையீரல் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி: நுரையீரல் உணவுகள்


PUBLISHED ON : டிச 18, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள் பற்றி சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள பட்டியல்:

பூண்டு

நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை, கேன்சர் செல்லுக்கு எதிராக செயல்படும் திறன், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் சக்தி, நுரையீரலில் ஏற்படும் தொற்று, கேன்சருக்கு எதிராக செயல்படும் தன்மை, பூண்டில் உள்ள, 'அலிசின்' என்ற வேதிப் பொருளுக்கு உள்ளது.தினமும் குறைந்தது, 3 பல் பூண்டாவது சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தொற்று அதிகம் பரவும் காலங்களில், பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கவே கூடாது.

கீரை வகைகள்

ஆக்சிஜன் குறைவதால் செல்களில் ஏற்படும் சிதைவை சரிசெய்யும் திறன்,கீரையில் உள்ள கூட்டு வேதிப்பொருளான, 'பைட்டோ கெமிக்கலில்' இருக்கிறது.உடல் உள்ளுறுப்பில் ஏற்படும் சிதைவு, வீக்கத்தை தடுப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஆப்பிள்

கீரையில் உள்ளதைப் போன்றே இதிலும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால், ஆஸ்துமா பாதிப்பு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம், நுரையீரல் தொடர்பான கோளாறுகள் வராது.

மீன்

மீன் அல்லது மீன் எண்ணெயை தினமும் உணவில் சேர்ப்பதால், அதில் உள்ள ஒமேகா - 3 உட்பட பல நுண்ணுாட்டச் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆரோக்கியமான உடல் நலத்திற்கு உதவும்.

இஞ்சி

இஞ்சியில் இயற்கையாக உள்ள ஜிஞ்கரோல் என்ற வேதிப் பொருள் ஆஸ்துமா, மைக்ரேன் தலைவலி, சளி, உயர் ரத்த அழுத்தம், இவற்றை சரி செய்யும்.

ஒரு அங்குலம் அளவு இஞ்சியை தோல் சீவி, லேசாக இடித்த, வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் குடிப்பது நல்ல பலனைத் தரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us