தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தொண்டையில் அதிக கவனம் தேவை!

தொண்டையில் அதிக கவனம் தேவை!

தொண்டையில் அதிக கவனம் தேவை!


PUBLISHED ON : டிச 17, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழைக்கால தொற்றுகள் நுரையீரலை பாதிக்கக் கூடியவை. மழையுடன் குளிரும் சேர்ந்தே வரும். தொண்டையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.மப்ளர் அல்லது தடிமனான பருத்தி துணியால் கழுத்துப் பகுதியைச் சுற்றி கொண்டால் குளிர் பாதிக்காது. மார்பு பகுதி முழுதும் நன்கு மூடி இருக்கும் படியான உடைகளையே அணிய வேண்டும்.ஆஸ்துமா, மூச்சுத் திணறல் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

எல்லா நேரமும் வெதுவெதுப்பான நீரையே குடிக்க வேண்டும். 'பிரிஜ்'ஜில் வைத்த குளிர்ந்த பதார்த்தங்களை தவிர்த்து விடலாம்.தடுப்பூசிநிமோனியா, புளு காய்ச்சலுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால், தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம்.

புகைப்பழக்கம் நுரையீரலை பாதிக்கும். சிகரெட் பிடிப்பவர்களை விட, அவர்களின் அருகில் இருப்பவர்களை அதிகம் பாதிக்கும். எனவே தவிர்த்து விட வேண்டும்.கொசுமழையுடன் கொசுவும் வரும். இனி வரும் காலங்களில், 'டெங்கு' காய்ச்சல் பரவ ஆரம்பிக்கும். சுற்றுப்புறத்தை குப்பை, நீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.மஞ்சள் காமாலைசில வகை மஞ்சள் காமாலை, கொசு மற்றும் ரத்தம் வாயிலாகவும், பல சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதாலும் பரவுகிறது.

பாம்புஅடைசலாக இல்லாமல், தேவையில்லாதவற்றை அப்புறப்படுத்தி, வசிக்கும் இடத்தை வெளிச்சமாக வைத்திருக்க வேண்டும். இந்தக் காலத்தில் பாம்பு கடியும் பிரதானமாக உள்ளது. சில பாம்புகள் கடித்த சுவடே தெரியாது. வெறுமனே மயக்கம் மட்டும் வரும். சில வயிற்று வலியாக வரலாம்.நம்மையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பராமரித்தாலே, பாதி தொற்றுகள் வராமலேயே போய் விடும்.

டாக்டர் பி.கிருஷ்ணமூர்த்தி,

மருத்துவ நிபுணர், மதுரை

94420 28825


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us