தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பாதிப்பை ஏற்படுத்தும் எலும்பு திண்மை குறைபாடு

பாதிப்பை ஏற்படுத்தும் எலும்பு திண்மை குறைபாடு

பாதிப்பை ஏற்படுத்தும் எலும்பு திண்மை குறைபாடு


PUBLISHED ON : அக் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வலி மற்றும் உயரம் இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். நோய் தாக்கியோருக்கு, அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். இதனால், வலி மற்றும் எலும்பு முறிவு ஏற்படும்

எலும்பு திண்மை குறைவு நோய் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

எலும்பு திண்மை குறைவு என்பது, மனிதனை, அமைதியாகக் கொல்லும் நோய். எலும்பின் புறப்பகுதி அடர்த்தியாகவும், உட்பகுதி, அடர்த்தி குறைவாகவும் இருக்கும். எலும்புத்தாது அடர்த்தி இழப்பு காரணமாக (வலுவின்மை), எலும்பு திண்மை குறை நோய் ஏற்படுகிறது. இதனால் எலும்புகளில் வலி, எலும்பு முறிவு ஏற்படலாம். பெண்கள், வயதானோர், குறைந்த உடல் எடை, பாலியல் சுரப்பிகள் குறைவாக சுரத்தல், புகைத்தல் மற்றும் சில மருந்துகளாலும் நோய் ஏற்படுகிறது.

பரம்பரை நோயா? குழந்தைகளை பாதிக்குமா?

இது பரம்பரை நோய் அல்ல. ஆண், பெண் இரு பாலருக்கும், இந்த நோய் வரலாம். பெண்கள், பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒரேவித சுற்றுப்புற சூழல் மற்றும், உணவு குறைபாடு உள்ளோரையும் பாதிக்கும். குழந்தைகளுக்கும் வரலாம். ஊட்டச்சத்து குறைபாடு, முடக்குவாத மூட்டு வலி, தைராய்டு நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ள குழந்தைகளையும் அதிகம் பாதிக்கும்.

நோயின் அறிகுறிகள் என்ன? பக்க விளைவுகள் உண்டா?

வலி மற்றும் உயரம் இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். நோய் தாக்கியோருக்கு, அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். இதனால், வலி மற்றும் எலும்பு முறிவு ஏற்படும்.

எலும்புத் திண்மை குறை நோய் எத்தனை வகை? எந்த வயதில் ஏற்படும்?

எலும்பு திண்மை குறைபாட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று, மாதவிடாய் நின்றபின், எலும்பின் மையப் பகுதியில் உள்ள திசுக்களை இழப்பது; இரண்டாம் வகையில், எலும்பின் மையப்பகுதி மற்றும் ெவளிப் பகுதிகளில் அதிக இழப்பு ஏற்படுவது. முதுமைக்குரிய எலும்பு திண்மை குறைவு நோய், 70 வயதுக்கு மேல் ஏற்படும். ஆண்களை விட, பெண்களை, இரு மடங்கு அதிகம் பாதிக்கும்.

வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டுமா?

ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்த்தல், நடைபயிற்சி, யோகா மற்றும் எடை துாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுதல், போதிய அளவு கால்சியம், வைட்டமின்-டி சத்துள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது அவசியம்.

பரிசோதனை, சிகிச்சை முறைகள் என்ன?

எலும்பு அடர்த்தியை திரையிடல் (அல்ட்ரா சவுண்டு), டி.இ.எஸ்.ஏ., ஸ்கேன் மூலமும், ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மூலமும் நோய்க் காரணத்தை கண்டறியலாம். சமீப காலமாக, எலும்பு மீளுருவாக்கம் வழிகள் மூலமாக கண்டறியப்படுகிறது.

கால்சியம், வைட்டமின், 'டி' சத்து குறைபாடு தான் நோய்க்கு காரணம். அலண்டிரோனேட், ரைஸன்ரோனேட், சோலன்டிரானிக் ஆசிட் போன்ற மருந்துகள், எலும்பு முறிவு ஏற்படுவதற்கான, அதிக ஆபத்தில் உள்ளோருக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், எலும்பு அடர்த்தி அதிகமாகும்.

பால், ஆரஞ்சுபழம், மீன், பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்புகள், பாலாடைக் கட்டி, சோயா பருப்புகள் சாப்பிடுவதன் மூலமும், சூரிய ஒளி உடலில் படும் வகையில் நிற்பதன் மூலம், கால்சியம், வைட்டமின் 'டி' சத்துக்களை பெற முடியும்.

இதோடு தொடர்புடைய நோய்கள் என்ன?

நாளமில்லா சுரப்பிகள் பாதிக்கப்படும். தைராய்டு நோய்கள், நீரிழிவுநோய், குறைந்த பாலியல் சுரப்பி நோய்கள். சத்து குறைவு, சிறுநீரக பிரச்னைகள், எலும்பு சதை நோய்கள், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், வெகு நாட்கள் படுக்கையில் இருத்தல் இதன் தொடர் நோய்கள்.

இந்த நோய் வராமல் தடுக்க முடியுமா?

நோய் தாக்குதல் வர வாய்ப்புள்ள, 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்கள், 70 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், ஆரம்ப காலத்திலேயே பரிசோதனை செய்து கொண்டு, அதன்படி மருந்துகள் உட்கொள்வதன் மூலம், எலும்பு முறிவுகளைத் தடுக்கலாம். சிலர், வாழ்நாள் முழுவதும், சிகிச்சை பெற வேண்டி வரலாம்.

தினமும் கால்சியம் மாத்திரை சாப்பிட்டால், நோய் வராது என்கிறார்களே?

கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. 'இந்தநோய், வயது மூப்பால் வரும். முதியோருக்கு மட்டுமே வரும். நோய் பாதிப்புள்ளோருக்கு அடிபட்டால் மட்டுமே எலும்பு முறியும், நோய் பாதித்தோர் பழைய நிலைக்கு திரும்ப முடியாது, சிகிச்சையே இல்லை' என்பதெல்லாம் கட்டுக்கதை. இதை யாரும் நம்ப வேண்டாம்.

நோய் பாதித்தோர் என்ன செய்யலாம்; என்ன செய்யக்கூடாது?

புகை பிடித்தல், மது அருந்துதல், டாக்டர் அறிவுரையின்றி கண்டபடி மாத்திரை சாப்பிடக் கூடாது. சூரிய ஒளி படும் படி இருத்தல், நடை பயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல், நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகள் செய்யலாம்.

டாக்டர் எஸ்.ராஜேஸ்வரி

பேராசிரியர், துறைத் தலைவர்,

மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு

நோய்களியல் துறை,சென்னை மருத்துவக் கல்லூரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us