தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'மூட்டுதேய்மானத்திற்கு அக்குபங்சர் சிகிச்சை சரியா?'

'மூட்டுதேய்மானத்திற்கு அக்குபங்சர் சிகிச்சை சரியா?'

'மூட்டுதேய்மானத்திற்கு அக்குபங்சர் சிகிச்சை சரியா?'


PUBLISHED ON : அக் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

என் வயது, 64. மூன்றாண்டுகளாக எனது இருமூட்டுகளிலும் தேய்மானத்தால் வலி உள்ளது. நாட்டு மருந்து, ஆயுர்வேத எண்ணெயால் பலனில்லை. அக்குபங்சர் செய்தால் சரியாகுமா?

மூட்டுகளில் பழுதடைந்த ஜவ்வை சீரமைக்கும் சக்தி, அக்குபங்சர் சிகிச்சையிலும் கிடையாது. தற்காலிகமாக, வலி குறைவதைப் போல ஒரு உணர்வு கிடைக்கலாம். ஆரம்ப கால மூட்டு தேய்மானம் உள்ளவர்கள் சிலர், இந்த பலனை உணர்கின்றனர். தீவிர மூட்டு தேய்மானம் இருந்தால், அக்குபங்சர் முறை வலியை குறைக்காது. மூட்டு மாற்று சிகிச்சையே நீண்ட கால தீர்வு.

என் வயது, 55. வலது தோள்மூட்டு வலியால் அவதிப்படுகிறேன். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்ததில், தோள்மூட்டு உறையில் வீக்கம், தோள்மூட்டில் நீர்தேக்கம் உள்ளது என, டாக்டர் கூறுகிறார். நான் என்ன செய்வது?

தோள்மூட்டு உறையின் வீக்கத்திற்கு உண்டான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். மூட்டுவாத நோய்க்கான ரத்தப் பரிசோதனைகள் சரியாக இருந்தால், நோயை கண்டுபிடிக்க மூட்டில் உள்ள உறையை, 'பயாப்சி' பரிசோதனை செய்ய வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தில், இதை மூட்டு நுண்துளை சிகிச்சை மூலம் செய்யலாம். பயாப்சி முடிவை பொறுத்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளவும், சில நேரங்களில் மூட்டு உறையில், புற்றுநோய் கூட, ஏற்பட்டு இருக்கலாம். விரைவில், மருத்துவரை சந்தித்து, ஆலோசிக்கவும்.

சாலை விபத்தில், என் வலதுகால் எலும்பு முறிந்து, தோலுக்கு வெளியே வந்தது. மருத்துவமனை செல்ல தாமதமானதால், ஒருநாள் கழித்தே, முறிந்த எலும்பில், 'ராடு' பொருத்தப்பட்டது. தற்போது காயம்பட்ட இடத்தில் இருந்து, சீழ் கொட்டுகிறது. நான் என்ன செய்வது?

எலும்பு முறிவு ஏற்பட்டு தோலை விட்டு வெளியே வந்தால், 'ஓப்பன் பிராக்சர்' எனப்படும். இவ்வாறு ஏற்பட்டால், காயம்பட்ட பகுதியில், அழுக்கை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இது மிகவும் அவசரமாக செய்யப்பட்டால், கிருமிகள் தொற்றும் அபாயம் குறைவு. உங்களுக்கு அது ஒருநாள் கழித்து நடந்துஉள்ளது. இது மிக தாமதமானதே.

தற்போதுள்ள நிலையில், உங்களுக்கு காயம்பட்ட பகுதியை திறந்து, நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். கிருமிகள் அகற்றப்பட்ட பின், பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படலாம். மேலும் பொருத்தப் பட்ட, 'ராடை' நீக்கி, 'எக்ஸ்டேர்னல் பிக்சேஷன்' என்ற சிகிச்சை முறையும் தேவைப்படலாம். எலும்பு மூட்டு டாக்டரிடம் ஆலோசனை செய்யவும்.

டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,

மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us