sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்துள்ளது... சில சந்தேகங்கள்... சில பதில்கள்

/

ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்துள்ளது... சில சந்தேகங்கள்... சில பதில்கள்

ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்துள்ளது... சில சந்தேகங்கள்... சில பதில்கள்

ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்துள்ளது... சில சந்தேகங்கள்... சில பதில்கள்


PUBLISHED ON : ஆக 15, 2010

Google News

PUBLISHED ON : ஆக 15, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.ரமணி, மதுரை: என் வயது 20. வலது கழுத்து முதல் வலது கை விரல்கள் வரை கடுமையான வலி ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ததில்,mild diffuse anular bulges of c45, c56 I.V. discs, just indenting on anterior subarachnoid CSF space. Small partial tear of rt anterior gleno humaral ligament   என ரிப்போர்ட்டில் உள்ளது. எழுதினால் கை வலி ஏற்படுகிறது. எலும்பு, நரம்பு மருத்துவ நிபுணரில், யாரை அணுக வேண்டும்?

இருபது வயதில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது மிக அரிது. முதுகுத் தண்டுவடத்தில், சி4-6 குறுத்தெலும்புகளிடையே உள்ள தசைகள் வீங்குவது, வயது ஏறும் போது ஏற்படும் தேய்மானத்தால் உருவாகும். நடுவயதை தொடும் போது தான் இதற்கான அறிகுறிகள் தென்படும். ஞ்டூஞுணணி டதட்ச்ணூச்டூ டூடிஞ்ச்ட்ஞுணt tஞுச்ணூ என்றால், உங்கள் தோள் பகுதியில் உள்ள ஒரு உறையின் ஒரு பகுதி கிழிந்துள்ளது என்று பொருள். விபத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டதா?

முதுகு தண்டில் உள்ள தட்டு வீங்கி இருப்பதால், வலது கையிலும், விரல்களிலும் வலி ஏற்படுகிறது. தோளில் காயம் ஏற்பட்டுள்ளதால், தோல் வலியும், கையை அசைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எலும்பு சிகிச்சை நிபுணரை நீங்கள் பார்க்க வேண்டும்.

சில நேரங்களில், மருந்துகள், பிசியோதெரபி மூலம் இதை கையாளலாம். வலியையும், இயலாமையையும் பிசியோதெரபி குறைக்கும். இதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை முறைகள் பலன் தரவில்லை எனில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்.

கி.ஆளவந்தார், அசோக் நகர், சென்னை: 63 வயதான எனக்கு, ரத்தத்தில் பொட்டாசியம் (5.3) அதிகமாக உள்ளது. மற்ற பிரச்னைகள் இல்லாததால், எந்த பழங்களை தவிர்க்க வேண்டும்? உணவு கட்டுப்பாடு என்ன?

ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதை, 'ஹைபர்கலீமியா' என்றழைக்கிறோம். இதய துடிப்பை நிறுத்தும் வகையிலான, ஆபத்தான நோய் இது. எனினும், கையை இறுக்கமாக மூடிய வகையில், எடுக்கப்படும் ரத்த மாதிரியில் நடத்தப்படும் பரிசோதனை என்பதால், இது தவறான அளவாக கூட இருக்கலாம். பரிசோதனையை மீண்டும் செய்ய வேண்டும். பொட்டாசியம் நிறைந்த மாத்திரைகள், ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள், 'நாலிடிக்சிக் ஆசிட்' அடங்கிய வலி நிவாரணிகள் சாப்பிட்டால், ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கும். சிறுநீரகம், கல்லீரல், அண்ணீரகம் (அட்ரினல்) ஆகியவற்றில் நோய் இருந்தாலும், இது போன்று ஏற்படலாம். சாதாரண உப்பை தவிர்த்த, சோடியம் குறைவாக உள்ள உப்பு சாப்பிடும் போது, உடலில் சோடியம் அளவு குறையும். அதுவும், பொட்டாசியம் அதிகரித்துள்ளதாகக் காட்டும். சரியான காரணத்தை கண்டறிந்து, மாத்திரை உட்கொண்டு சரி செய்யலாம். பொட்டாசியம் அடங்கிய பழங்கள் உண்பதை தவிர்க்கவும். சிகிச்சையோ, உணவு முறையோ எடுத்து கொள்வதற்கு முன், மீண்டும் ஒரு முறை, பொட்டாசியம் அளவை சரிபார்த்து கொள்ளுங்கள். மணிகண்டன், மயிலாப்பூர், சென்னை: 30 வயதான எனக்கு, நான்கு வருடங்களுக்கு முன், இரண்டு அல்லது மூன்று வெள்ளை முடிகளே இருந்தன. கடந்த மூன்று வருடமாக, 'பீல்டு ஒர்க்' செய்து வருகிறேன். வெள்ளை முடி அதிகரித்ததுடன், முடி உதிர்வதும் அதிகமாகிறது. வெள்ளை முடி மேலும் பரவாமல் தடுக்க வழி சொல்லவும். நீங்கள் செல்லும் இடங்கள், ரசாயனம் நிறைந்த இடங்களா என்பதை சொல்லவில்லை. தொழிற்சாலைகளில் கூட, நுண்ணிய ரசாயனத் துகள்கள் காற்றுடன் கலந்து, தலைமுடி கொட்டுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. 'பீல்டு ஒர்க்' அதிகரித்துள்ள நிலையில், போதுமான அளவு வைட்டமின், தாது மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் உட்கொள்ளவில்லை எனில் முடி கொட்டும்.

மேலும், வயது ஏறும் போது முடி உதிர்வது இயற்கையே. வெள்ளை முடி வளர்வதும், வழுக்கை ஏற்படுவதும் பாரம்பரியமாக உருவாவதே. உங்கள் பெற்றோருக்கு, உடன் பிறந்தோருக்கு எந்த வயதில் வெள்ளை முடியும், வழுக்கையும் விழுந்ததோ, அதே வயதில் உங்களுக்கும் ஏற்படுவது இயற்கை தான்.






      Dinamalar
      Follow us