தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இரும்பு சத்தை தரும் வாழைப்பழம்

இரும்பு சத்தை தரும் வாழைப்பழம்

இரும்பு சத்தை தரும் வாழைப்பழம்


PUBLISHED ON : நவ 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முக்கனிகளில், வாழைப்பழம் மிகச்சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் நைட்ரஜன் சத்துக்கள் உடலுக்கு புத்துணர்வு தந்து வலிமை சேர்க்கிறது.

வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு தன்மை இளமையாக இருக்க உதவுகிறது. தினமும் இரவு உணவுக்கு பின் ஒன்று அல்லது இரண்டு பழம் சாப்பிடுவது ஜீரணத்துக்கு சிறந்த மருந்து.

வாழைப்பழத்தில் உள்ள பெக்டின் குடலில் அதிகம் உள்ள நீரை உறிஞ்சி உள் உறுப்புக்களை சீராக இயங்க செய்வதால், உணவு நன்றாக ஜீரணமாகி மலச்சிக்கல் நீங்க உதவுகிறது. மலச்சிக்கல் நீங்கினால், தோல் அரிப்பு போன்ற அலர்ஜி நோய் வராது.

இதில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகப்படுத்தி, ரத்த சோகை நோயை குணமாக்கும். மேலும் அல்சர், சிறுநீரக நோய், உடல் பருமன், மூட்டு வலி போன்ற நோய்களுக்கு வாழைப்பழம் இயற்கை மருந்தாக உள்ளது.

வாழைப்பழத்தை காலை உணவாகவும், சாப்பாட்டுக்கு பின்னும் சாப்பிடலாம். மற்ற பழங்களுடன் வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி போட்டு புரூட் சால்டாக சாப்பிடலாம். வாழைக்காயில் வத்தல் மற்றும் சிப்ஸ் தயாரித்து செய்து சாப்பிடலாம்.

வாழைக்காயில், 20 முதல் 25 சதவீதம் வரை மாவுச்சத்து உள்ளது. காய் பழுக்கும் போது அது இனிப்பு சத்தாக மாறுகிறது. நன்றாக பழுக்காத வாழைப்பழத்தை சாப்பிட்டால் அஜீரணம் எற்படும்.

பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us