தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தண்ணீர் பாட்டிலில் தரம் அவசியம்!

தண்ணீர் பாட்டிலில் தரம் அவசியம்!

தண்ணீர் பாட்டிலில் தரம் அவசியம்!


PUBLISHED ON : நவ 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீரின்றி அகிலமும் அசையாது எனும் அளவுக்கு அத்தியாவசிய தேவைகளிலே அதிமுக்கியமானதாக திகழ்கிறது குடிநீர். எங்கு சென்றாலும், தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்துச் செல்லும் பழக்கம் பலருக்கும் உண்டு. இப்படி, நாம் வாங்கும், பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் ஒரே வகையிலான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கபடுவதில்லை.

விலையில் மட்டுமே மாற்றங்களை காண்கிறோம். ஆனால், அதன் தரத்திலுள்ள மாற்றங்களால் நம் உடலுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து யாருக்கும் கவலையில்லை. குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களால்தான் தண்ணீர் பாட்டில் தயாரிக்க வேண்டும் என்பது நியதி. எந்தெந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு உகந்தது, தீயது என்பதை அதில் இருக்கும் குறியீட்டு எழுத்துக்களை வைத்து எளிதில் கண்டறியலாம்.

PET / PETE: பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக்கில் தான் தயாரிக்கப்படுகின்றன. தண்ணீர் பாட்டில், கூல் ட்ரிங்க்ஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒருமுறை மட்டும் பயன்படுத்த வேண்டிய பிளாஸ்டிக் பொருள். மீண்டும், மீண்டும் இதை பயன்படுத்துவதால் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாகும் அபாயம் இருக்கிறது. இது மிகையான நச்சுத்தன்மை உடையது.

HDP / HDPE: எச்.டி.பி., வகை கடினமான பிளாஸ்டிக் பால் ஜக் (Jug), டிட்டர்ஜன்ட், எண்ணெய் பாட்டில்கள், பொம்மைகள் மற்றும் பிளாஸ்டிக் பேக் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை பிளாஸ்டிக்கில் எந்த ரசாயன வெளிபாடுகளும் இருப்பதில்லை. இந்த வகை பாட்டில்களில் நீர் பிடித்து குடிப்பது தவறில்லை. இவை பாதுகாப்பானவை. எனவே, இந்த சீல் உள்ள பாட்டில்களை தண்ணீர் குடிக்க பார்த்து வாங்குங்கள்.

PVS/3V: மிருதுவான, வளைந்துக் கொடுக்கும் பிளாஸ்டிக் இவை. உணவுப் பொட்டலங்களை கட்டுவதற்கு, சிலவகை குழந்தைகள் பொம்மை தயாரிக்க இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து இரண்டு வகையான நச்சுத்தன்மை உள்ளது. இந்த நச்சுக்கள் உடலின் ஹார்மோன்களை பாதிக்கவல்லது. எனவே, இதை தவிர்ப்பது நல்லது.

LDPE: தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்க இந்த பிளாஸ்டிக் வகை பயன்படுத்தவே கூடாது. இது எந்த கெமிக்கலும் வெளிப்படுத்துவதில்லை எனிலும் கூட, இந்த பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகள், பானங்கள் அடைத்து பருகுவது உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க பெரும் காரணமாக இருக்கிறது.

PP: வெள்ளை அல்லது டிரான்ஸ்பரன்டாக இருக்கும் இந்த பிளாஸ்டிக், மருந்துகள் மற்றும் தயிர் போன்ற வை அடைக்க பயன்படுத்தப்படுகின்றன. இது எடையில் குறைவானது. இது சூட்டை தாங்கும் தன்மை உடையது. சூடு செய்தால் இவை வேகமாக உருகாது.

PS: பாலீஸ்டிரின் (PS) விலை அதிகமான, எடை குறைவான பிளாஸ்டிக். பானம் குடிக்கும் கப், உணவுகள் அடைப்பதற்கு, முட்டை அடுக்கி வைக்க என பல்வேறு பயன்பாட்டுக்கு, இது உபயோகப்படுகிறது. நீண்ட காலம் பயன்படுத்த கூடாது.

PC / பெயரிடப்படாத பிளாஸ்டிக்: ஸ்போர்ட்ஸ் தண்ணீர் பாட்டில், உணவுப் பொருட்கள் அடைப்பதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. இது ஒருவகையான மிகவும் அபாயமான பிளாஸ்டிக். இது மறுசுழற்சிக்கு உகந்தது அல்ல. இது, உணவு பொருட்கள் அடைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் (BPA) கலப்பு கொண்டுள்ளது ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us