தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரத்தஅழுத்தம் 110/70 என்பது "லோபிரஷரா'

ரத்தஅழுத்தம் 110/70 என்பது "லோபிரஷரா'

ரத்தஅழுத்தம் 110/70 என்பது "லோபிரஷரா'


PUBLISHED ON : அக் 16, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து ஒரு மாதமாகிறது. நான் எப்போது இரு சக்கர வாகனம் ஓட்ட இயலும்?

எஸ். ராஜ்மோகன், தேனி



பைபாஸ் சர்ஜரி என்பது இருதயத்தின் ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் இருந்தோ, ரத்தநாளத்தை எடுத்து ஆபரேஷன் மூலம் சரி செய்வதாகும். இது செய்தவர்களுக்கு பொதுவாக 3 மாதங்கள் கழித்து, ரத்தம், சிறுநீர், மார்பு எக்ஸ்ரே, எக்கோ, டிரெட்மில் பரிசோதனை செய்யப் படும். இவை அனைத்தின் முடிவும்

நார்மல் ஆக இருந்தால், தாராளமாக நீங்கள் இருசக்கர வாகனங்களையோ, காரையோ ஓட்ட இயலும். மோட்டார் சைக்கிளை பொறுத்தவரை, 'கிக் ஸ்டார்ட்டர்' வாகனங்களைவிட, 'செல்ப் ஸ்டார்ட்டர்' வசதி உள்ள வாகனங்களை பயன்படுத்துவது நல்லது.



எனக்கு மாரடைப்பு வந்து 2 ஆண்டுகளாகிறது. 'ஆஞுtச்டூணிஞி, உஞிணிண்ணீணூடிண, அtணிணூதிச் குtச்tடிண மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். தற்போது எனக்கு அல்சர் போன்று அடிக்கடி வயிற்று வலி வருகிறது. நான் உஞிணிண்ணீணூடிண மாத்திரையை நிறுத்திவிடலாமா?

கே. பாரதிராஜன், மதுரை



நீங்கள் கூறியது போல உஞிணிண்ணீணூடிண மாத்திரை எடுப்பவர்களுக்கு வயிற்றுப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அல்சர் போன்ற பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு பதிலாக டூணிணீடிஞீணிஞ்ணூஞுடூ மாத்திரையை எடுக்க முடியும். இதில் அல்சர் வரும் தன்மை குறைவு. இத்துடன், 'கச்ணtணிணீணூச்த்ணிடூஞு' என்ற மாத்திரையை சேர்த்து எடுக்கலாம்.

உங்களுக்கு அவசியம் எக்கோ, டிரெட் மில் பரிசோதனை தேவைப் படும். இந்த பரிசோதனையில் ஏதும் கோளாறு இருந்தால், அவசியம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை தேவைப் படும்.



எனது வயது 27. சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குகிறது. எக்கோ பரிசோதனையில், 'கீ.ஏ.ஈ. குஉஙஉகீஉ M.கீ என வந்துள்ளது. இதற்கு எனது டாக்டர் ஆப்பரேஷன் தேவை என்கிறார். இதை பலூன் சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியுமா?

பி. சுஜாதா, திண்டுக்கல்



குஉஙஉகீஉ M.கீ., என்பது இருதயத்தின் இடதுபுறம் உள்ள வால்வில் அதிக ரத்தக்கசிவு உள்ளது என்பதாகும். இதை பலூன் சிகிச்சை மூலம் சரிசெய்ய இயலாது. அவசியம் ஆப்பரேஷன் தேவைப்படும். இதில் உங்கள் வால்வை ரிப்பேர் செய்தோ அல்லது புதிதாக செயற்கை வால்வு பொருத்தவோ செய்வர். உங்கள் சொந்த வால்வை சரிசெய்தால் அது ரிப்பேர் என்றும், செயற்கை வால்வு பொருத்தினால் அதை 'கீஞுணீடூச்ஞிஞுட்ஞுணt' என்றும் கூறுவர்.



* எனக்கு எப்போது ரத்தஅழுத்தம் பரிசோதனை செய்தாலும், 'லோ பிரஷர்' ஆக உள்ளது. அதாவது 110/70 என்ற அளவிலேயே உள்ளது. இதனால் பாதிப்பு உள்ளதா? ரத்தஅழுத்தம் 110/70 என்பது 'லோ பிரஷர்' அல்ல. லோ பிரஷர் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. எதனால் அது ஏற்படுகிறது என்று கண்டறிவதே இதில் முதன்மையானது. பொதுவாக 110/70 என்பதற்கு சிகிச்சை தேவையே இல்லை.



டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us