PUBLISHED ON : மே 01, 2022

கொரோனா தொற்றுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல, வைரசை அழிப்பதற்கும் சேர்த்தே தான் தடுப்பு மருந்து கண்டுபிடித்தோம். துவக்கத்தில் இருந்தது போன்று அப்படியே இல்லாமல், கொரோனா வைரசின் மரபணுவில் மாற்றங்கள் தொடர்ந்து ஏற்படுகிறது. சமீபத்தில் வந்த 'பிஏ1, பிஏ2' வைரசின் மூலக்கூறில் குறிப்பாக அதனுடைய வெளிப்புறத்தில் கூர்மையாக நீண்டுள்ள 'ஸ்பைக் புரோட்டீன்' எனப்படும் புரதத்தில் வியப்பான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
நம் எதிர்ப்பு சக்தியில், 25 சதவீதம் மட்டுமே திறனுடன் கொரோனாவை எதிர்க்கும் நிலையில் உள்ளது. மீதியுள்ள 75 சதவீதமும் வலிமையாக வேண்டும் என்றால், 'பூஸ்டர் டோஸ்' அவசியம். அதற்காக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்பதல்ல. பரவக்கூடிய அபாயம் இருக்கும் நேரத்தில் பூஸ்டர் டோஸ் போடுவது பாதுகாப்பானது. ஒருவேளை தொற்று பாதித்தால், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதில் இருந்து நிச்சயம் இது பாதுகாப்பு தரும்.
மரபணுவில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்பட்டாலும், எல்லா வகையான கொரோனா தொற்றுக்கும் பாதுகாப்பு தரும் வகையில் தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சி நடக்கிறது.
- பேராசிரியர் ஷிவ் பிள்ளை,
மெடிசின், ஹெல்த் சயின்ஸ் டெக்னாலஜி,
ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல், அமெரிக்கா
