உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 20, 2022

அ நிறம் | அளவு
மாதத்தில் 22 நாட்கள், சத்தான, ஆரோக்கியமான உணவை திட்டமிட்டு சாப்பிடுபவர், ஏழு நாட்கள் உடற்பயிற்சி செய்தால் போதும். நடை பயிற்சி, 'ஜாகிங்' நல்ல பலனைத் தரும். உடலின் எந்த பாகம் குண்டாக உள்ளதோ, அதற்கு மட்டும் உடற்பயிற்சி செய்வதும் தவறு.
அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள தசைகளுக்கு வேலை கொடுக்கிறோம் என்பதைத் தவிர, எந்த பலனும் கிடையாது. தலை முதல் கால் வரை, ஒரே சீராக எல்லா தசைகளுக்கும் வேலை தரும் விதமாக உடற்பயிற்சி இருக்க வேண்டும்.
மாதத்தில், 1.5 முதல் 2 கிலோ வரை சீராக எடையைக் குறைப்பது தான் நீண்ட பலன்தரக் கூடியது. தண்ணீர் தேவை என்பது நபருக்கு நபர் மாறுபடும். ஆனாலும், ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது, எடை குறைய உதவும்.
- ருஜுதா திவாகர், நியூட்ரிஷனிஸ்ட், மும்பை
