தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'நோசிபோ' விளைவு!

'நோசிபோ' விளைவு!

'நோசிபோ' விளைவு!


PUBLISHED ON : பிப் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொற்று வியாதிக்கோ அல்லது வேறு ஏதேனும் நோய்க்கோ புதிய மருந்து கண்டுபிடித்தால், கடைசி கட்டத்தில் மனிதர்களுடன், 'டிரையல்' செய்து, எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்பது வழக்கம். அந்த மருந்து நோய்க்கு எதிராக ஏற்படுத்தும் விலை, 'பிலேசிபோ' விளைவு. இது பற்றி கேள்விப்பட்டு இருப்போம். இதன் மறுபக்கம் ஒரு விளைவு இருப்பது, 'நோசிபோ!'

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்தது, வழக்கம் போல நடந்த டிரையலில், பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து; மீதி பாதி பேருக்கு தடுப்பு மருந்து என்று சொல்லி, அவர்களுக்கு தெரியாமல், வெறும் தண்ணீரும் உடலினுள் செலுத்தப்பட்டது. ஆனால் அனைவரிடமும், தடுப்பு மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் விளக்கப்பட்டன.

உண்மையான தடுப்பு மருந்து செலுத்தியவர்களுக்கு என்னவெல்லாம் பக்க விளைவுகள் வந்ததோ, அதே அறிகுறிகள், தண்ணீர் செலுத்தியவர்களுக்கும் வந்தன. பக்க விளைவுகள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதால், மருந்து என்று சொல்லி தண்ணீரை செலுத்தினாலும், அதே விளைவுகள் தான் வருகின்றன. மனதின் எண்ணங்கள் தான் அனைத்திற்கும் அடிப்படை.

- டூரின் மெடிக்கல் ஸ்கூல், இத்தாலி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us