PUBLISHED ON : ஜன 06, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமரன், திருவண்ணாமலை: நான், ரத்த அழுத்தத்திற்காக, கடந்த, இரண்டாண்டுகளாக, 'அம்லாங்' 5 மி.கி., என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, 'அம்லோடிபைன்' 2.5 மி.கி., என்ற மாத்திரை தந்துள்ளனர். நான் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாமா?
'அம்லாங்' என்பது ஒரு, வணிகப் பெயர். அந்த மாத்திரையில் உள்ள மருந்தின் பெயர், 'அம்லோடிபைன்' என்பதாகும். இது ரத்தக் கொதிப்புக்கு தரப்படும் நல்ல மருந்து. உங்களுக்கு தரப்பட்டுள்ள 'அம்லோடிபைன்' 2.5 மி.கி., மாத்திரையில், இரண்டு எண்ணிக்கை எடுத்துக் கொள்வது போதுமானது.