தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஓட்டப்பயிற்சி உடலுக்கு நல்லதா

ஓட்டப்பயிற்சி உடலுக்கு நல்லதா

ஓட்டப்பயிற்சி உடலுக்கு நல்லதா


PUBLISHED ON : நவ 13, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எனது வயது 45. இதுவரை உடற்பயிற்சி எதுவும் செய்ததில்லை. தற்போது தினமும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளலாம் என கருதுகிறேன். டாக்டரின் ஆலோசனை என்ன? எஸ். பார்த்தசாரதி, விருதுநகர்



நாற்பத்து ஐந்து வயதில் ஓட்டப் பயிற்சி எடுப்பது நல்லதல்ல. நீங்கள் அவசியம் ஒரு இருதய டாக்டரை அணுகி, உங்கள் எடை, ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்புச் சத்து அளவு, எக்கோ பரிசோதனை, டிரெட் மில் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவை அனைத்தும் நார்மல் என்றால் நடைப் பயிற்சியை துவக்கலாம். இந்த வயதில் ஓட்டப் பயிற்சி தேவையில்லை.



சமையலுக்கு எந்த எண்ணெயை பயன்படுத்துவது நல்லது? பி.பழனிக்குமார், திண்டுக்கல்



பொதுவாக சமையலுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு எண்ணெயை குறைக்கிறோமோ, அதற்கேற்ப நன்மை கிடைக்கும் என்பது உண்மை. எண்ணெயை சிறிது தாளிக்க எடுத்துக் கொள்ளலாமே தவிர, பொரிக்க பயன்படுத்தக் கூடாது. எண்ணெய் வகைகளில் சிறந்தது 'ஆலிவ் எண்ணெய்'தான். இதன் விலை அதிகம் என்பதாலும், சுவை விரும்பும் அளவு இல்லாததாலும், பலர் உபயோகிப்பது இல்லை. ஒருமுறை உபயோகித்த எண்ணெய் மீதிஇருந்தால், அதை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சமையலுக்கு தவிட்டு எண்ணெய், நல்லெண்ணை, சூரியகாந்தி எண்ணெயை உபயோகிக்கலாம். இந்த எண்ணெய் வகையை மாதம் ஒருமுறை மாற்றிக் கொள்வது சிறந்தது.



ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லதா?:



எனது வயது 45. இதுவரை உடற்பயிற்சி எதுவும் செய்ததில்லை. தற்போது தினமும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளலாம் என கருதுகிறேன்... நாற்பத்தைந்து வயதில் ஓட்டப் பயிற்சி எடுப்பது நல்லதல்ல. ஒரு இதய டாக்டரை அணுகி, உங்கள் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்புச் சத்து அளவு, எக்கோ பரிசோதனை, டிரெட் மில் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவை அனைத்தும் நார்மல் என்றால் நடைப் பயிற்சியை துவக்கலாம்.



மழைக்கால கால் புண்: எனது கால் விரலிடுக்கில் மழைக் காலத்தில் புண்கள் தோன்றுகின்றன. இதற்கு என்ன செய்யலாம்? வேம்பிலுள்ள அசாடிராக்டின் கிருமிக் கொல்லி, வல்லாரை கீரையிலுள்ள சென்டமின் மற்றும் ஏசியாடிக்கோசைடுகள் புண் ஆற்றும் தன்மையுடையது. வேப்பிலை மற்றும் வல்லாரையை அரைத்து, தொடர்ந்து தடவி வர, சேற்றுப்புண் விரைவில் ஆறும்.



'பேஸ் மேக்கர்' வைத்தவர்கள் 'டிவி' பார்க்கலாமா? கே.ரங்கசாமி, தேனி



பேஸ் மேக்கர் வைத்தவர்கள் 'டிவி' போன்ற சாதாரண மின்சாதன பொருட்களை தாராளமாக உபயோகிக்கலாம். அதேசமயம் சக்தி வாய்ந்த மின்காந்த பொருட்களை தவிர்த்தாக வேண்டும். குறிப்பாக எம்.ஆர்.ஐ., ஸ்கேன் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக தலையில் காயம் ஏற்பட்டால் எம்.ஆர்.ஐ., ஸ்கேனுக்குப் பதில் சி.டி., ஸ்கேன் எடுக்கலாம். தற்போது இதற்கும் அதிநவீன, 'M.கீ.ஐ., குச்ஞூஞு' என்ற பேஸ்மேக்கர் வந்துள்ளது. இது பொருத்தியவர்கள் தாராளமாக எம்.ஆர்.ஐ., ஸ்கேனையும் எடுக்கலாம்.ச



-டாக்டர் சி.விவேக்போஸ்,

மதுரை



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us