தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சளியில் ரத்தமா...! உஷார்

சளியில் ரத்தமா...! உஷார்

சளியில் ரத்தமா...! உஷார்


PUBLISHED ON : மே 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 05, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

* எனது உடல் அடிக்கடி சோர்வடைகிறது. இதற்கு காரணம் என்ன?

உடல் சோர்வடைய பல காரணங்கள் உண்டு. ரத்த சோகை, தைராய்டு குறைநிலை, அதிகநிலை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் மற்றும் தசை தொடர்பான நோய்கள், சிறுநீரக கோளாறு, இதய கோளாறு போன்ற பாதிப்புகள் காரணமாக உடல் சோர்வு ஏற்படும். முதலில் உங்களுக்கு பசி நன்றாக இருக்கிறதா, மலச்சிக்கல் பிரச்னை உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு மருத்துவரை நாடி, காரணத்தை அறிந்து தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

* எனக்கு அடிக்கடி சளியில் ரத்தம் வருகிறது. இதற்கு என்ன காரணம்.

நுரையீரல் தொடர்பான நோய் தொற்று இருந்தால் சளியில் ரத்தம் வரும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை கிருமிகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் ரத்த அளவு மிகக்குறைவாக இருப்பவர்களுக்கு தொண்டைப் புண் மற்றும் வாய் புண்ணில் இருந்து கூட ரத்தம் வரலாம். ஆனால் ரத்த அளவு மிக அதிகமாக இருந்தால், நிச்சயமாக நுரையீரல் தொடர்பான பாதிப்பாகத்தான் இருக்கும். எனவே எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை செய்து, எந்த இடத்தில் இருந்து ரத்தம் வருகிறது என்பதை அறிந்து சிகிச்சை பெற வேண்டும். ரத்தம் உறையாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் மாத்திரை, சிகிச்சைகளால் கூட சளியில் ரத்தம் வரலாம். சில நேரங்களில் இருதய நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

* எனக்கு மாலை மற்றும் இரவு வேளைகளில் குளிர் நடுங்கவைக்கிறது. காய்ச்சலும் வருகிறது. இதற்கு காரணம் என்ன.

உங்களுக்கு சளி தொந்தரவு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். டி.பி., நோயினால் சளி ஏற்படும் போது மாலை, இரவில் மட்டும் காய்ச்சல் வரும். பிற கிருமிகளால் ஏற்படும் சளியினாலும், ஏற்படலாம். எனவே மருத்துவரை அனுகி காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

* எனது வலது கால் பாதத்தில் அதிக வீக்கம் இருக்கிறது. ஏன்.

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் அந்த காலில் கிருமி தொற்று ஏற்பட்டு வீக்கம் வரும். சில நேரங்களில் காலின் உட்புறத்தில் சலம் பிடித்திருக்கும். அதனால் கூட வீக்கம் ஏற்படலாம். கால் சிறை ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படுவதாலும் நீணநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாலும் வீக்கம் வரலாம். வீக்கத்தின் தன்மையை ஆராய்ந்து சிகிச்சை பெற வேண்டும்.

-டாக்டர். சங்குமணி

பொது, சர்க்கரை நோய் நிபுணர், மதுரை

98432 72876


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us