உள்ளடக்கத்திற்கு செல்ல

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - பட்டையைக் கிளப்பும் பட்டை!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - பட்டையைக் கிளப்பும் பட்டை!
PUBLISHED ON : மே 05, 2019

அ நிறம் | அளவு
இருநுாறு மில்லி தண்ணீரை அடுப்பில் வைத்து, அதில், ஒரு ஸ்பூன் பட்டைத் துாள் அல்லது விரல் நீள இரண்டு பட்டைத் துண்டுகளைப் போட்டு, 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
நீர் அடர் பழுப்பாக மாறியதும், அடுப்பை அணைத்து விட்டு, ஆற விடவும். மிதமான சூடு வந்ததும், ஒரு ஸ்பூன் தேன் கலந்து, காலை மற்றும் இரவு, உணவிற்கு முன் குடிக்கவும்.
முதல் தரமான பட்டை, கடினமாக, அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். இதில் செய்த பொடி சற்றே கொரகொரப்பாக இருக்கும். உடைப்பதற்கு எளிதாக, சருகு போல இருக்கும் பட்டை தரம் குறைந்தது.
இயற்கையான இந்த பானம், இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பைக் குறைப்பதோடு, ஒட்டு மொத்தமாக உடல் எடையையும் குறைக்க வல்லது. ரத்த அழுத்தத்தை சீராக்கி, செரிமான சக்தியை மேம்படுத்தவல்லது.
www.skimmyrecipies.com
